உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் திராவிடமும் தமிழும்!

தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் திராவிடமும் தமிழும்!

திராவிடம் அல்லது தமிழ் - இந்த இரண்டையும் விட்டால் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு வருகிறது.கவர்னர் ரவி கலந்துகொண்ட துார்தர்ஷன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் செய்த பிழை, இப்போது தமிழக அரசியல் ரயிலை மீண்டும் பின்னோக்கி செலுத்துகிறது. திராவிடம், தமிழ் என்று மாறி மாறி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும் இந்த ஆயுதத்தை கையில் எடுத்ததால், தமிழக கட்சிகள் திரும்ப பழைய பல்லவி பாடத் துவங்கி உள்ளன.ஆரம்பத்தில் திராவிடம் தான் தமிழ், தமிழ் தான் திராவிடம் என்றார்கள். பின்னர் திராவிடம் வேறு, தமிழ் வேறு என்றார்கள். இப்போது திராவிடம் என்பது மரபினர், தமிழ் என்பது தேசிய இனம் என புது விளக்கம் கொடுக்கிறார்கள். ஆக மொத்தத்தில் தமிழர்கள் குழப்பத்தில் மூழ்கி விட்டனர்.‛‛நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாயை முடக்குவேன். வேறு பாடலை வாழ்த்தாக மாற்றுவேன். திராவிடம் என்பது மாயை'' என்று திமுகவிற்கு எதிராக தோள் தட்டுகிறார் சீமான். இதற்கு பதில் அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‛‛திராவிடம் என்பது மரபினம். தமிழ் என்பது தேசிய இனம். சீமான் சொன்னதில் தவறு இல்லை '' என்கிறார் .சீமானுக்கு கோபம் வரக் காரணம், தமிழை மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல் திமுக தலைவர்கள் எப்போதும் பேசுவது தான். ஏனென்றால் தமிழின் பாதுகாவலன் தான் ஒருவன் மட்டுமே என்பது போல் காட்ட நினைக்கிறார் சீமான். திமுகவால் சீமானின் தமிழ் அரசியலுக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என நினைக்கிறார் சீமான்.ஏற்கனவே சமீபகாலமாக கூட்டணி கட்சியாக இருந்துகொண்டே திமுகவை தெறிக்க விடுகிறார் திருமாவளவன். மது ஒழிப்பு மாநாட்டில் ஆரம்பித்த இந்த ‛‛தெறி'' சீமானின் கருத்துக்கு ஆதரவாக இப்போது வெளிவந்துள்ளது. ‛‛திராவிடம் தான் தமிழ், தமிழ் தான் திராவிடம்'' என திமுக கூறி வரும் நிலையில், இரண்டும் வேறு என சொல்லி கூட்டணிக்குள் புது வெடியை கொளுத்தி போட்டுள்ளார் திருமா.தேசிய கட்சிகள் பலம் பெறும் வரையில் தமிழ்நாட்டில் திராவிடமும் தமிழும் அரசியலை ஆட்டிப்படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

VENKATESAN PS
அக் 28, 2024 17:18

தமிழ் வேறு திராவிட வேறு தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது திராவிடம் 150 வருடத்திற்கு முன் ஆங்கிலேயர்களால் வைத்த பெயர்தான் திராவிடம் தென்னிந்தியா மொழிகளான தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய நான்கு மொழியில் சேர்த்து திராவிடம் என்று சொல் உருவானது தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகம் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை தமிழர்களை வாழ்வாதாரத்தை உயர்த்த ஏற்படுத்தப்பட்டது திமுக அதிமுக என்பது மலையாளரையும் தெலுங்குரையும்கன்னடகாரர்களையும்தமிழரோடு சேர்ந்உயர்த்ததிராவிர் என்ற சொல் ஏற்படுத்தபட்டது கார்வாழ்வாதாரத்தை உயர்த்த ஏற்படுத்தப்பட்டது


VENKATESAN PS
அக் 28, 2024 17:14

தமிழன் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் உலகில் முதலில் தோன்றிய தமிழ் இனம் திராவிடம் என்பது 1856 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் தென் தமிழக மொழிகளான தமிழ் மலையாளம் கன்னடம் ஆகியவைகளை இணைத்து திராவிடம் என்ற சொல்லை ஆங்கிலேயன் வைத்த பெயர் திராவிடம் என்ற சொல் திருக்குறளியோ மனோன்மணியம் கொண்டலகேசையோ வளையாபதியோ போன்ற நூல்களில் இல்லை வரலாறு இல்லை அப்படி இருக்கும் பொழுது எப்படி திராவிடம் என்ற சொல் வந்திருக்கும் சிந்தனை செய்யுங்கள் தேசப்பற்றும் தமிழ் பற்றும் இரு கண்கள் ஆக தமிழ் வேறு திராவிட வேறு அதனால்தான தமிழக வெற்றி கழகம் என்றும் நாம் தமிழர் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் மூன்று கட்சிகள் தமிழனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது இவைதான் தமிழனை பராசாட்டும் திமுக அதிமுக போன்ற கட்சிகள் மலையாளத்தையும் தெலுங்கு கன்னடம் ஆகியோர்களை சேர்த்து தான் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது இதற்கு அடிப்படை காரணம் தந்தை பெரியார் தாய் மொழி தெலுங்கு கலைஞர் கருணாநிதி தாய்மொழி தெலுங்கு இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தான் திராவிடம் என்ற சொல்லை என்று சொல்லு வரவேற்கிறார்கள் இப்படிக்கு பச்சைத்தமிழன் கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க முன்னாள் துணைத் தலைவர் பி எஸ் வெங்கடேசன் பிகாம்பிஎல் செல் 9361511101


God yes Godyes
அக் 23, 2024 22:43

விவசாயம் செய்ய தெரிந்தவன் சிந்து வெளி தமிழன். எந்த திராவிடனும் விவசாயம் செய்ததில்லை. கலப்பை பிடிக்க தெரியாத திராவிடம். போலிபெயர்.


God yes Godyes
அக் 23, 2024 22:37

திராவிட நல் திருநாடு என பாடிய நபர் புலவர்.அவருக்கு வரலாறு தெரியாது..


God yes Godyes
அக் 23, 2024 22:34

திராவிடன் என்ற புனை பெயரிடப்பட்ட காட்டுவாசிகளை முன்னேற்றுவதாக சொல்லும் கட்சிகளுக்கு தமிழர் ஏன் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.


VENKATESAN PS
அக் 28, 2024 17:08

திராவிடம் வேறு தமிழ் வேறு திராவிடம் என்ற சொல் ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவை ஆட்சி செய்யும் மொழிகளை ஒன்றிணைத்து திராவிடம் என்று பெயர் சூட்டினார் திராவிடம் என்ற சொல் 150 வருடங்கள் ஆகிறது ஆனால் தமிழினம்கிமு 3000 ஆண்டுகள் பழமையான சொல உலகில் முதலில் தோன்றிய இனம் தமிழினம் அதில் இருந்து பிரிந்து தான் மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்த மூன்று மொழிகள் சேர்ந்தால் திராவிடம் தமிழ் வேறு திராவிட வேறு திராவிடம் என்ற சொல் திருவள்ளுவர் நூலிலே இல்லை சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற நூல்களில் திராவிடம் இல்லை அப்படி இருக்கும் பொழுது திராவிடம் வேறு தமிழ் வேறு இதைப் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் தமிழன் ஆளவில்லை காமராஜர் பட்சத்தமிழன் பச்சைத் தமிழன் அண்ணாதுரை இருவரும் தாய் மொழியை தமிழ் ஆனால் தந்தை பெரியாருக்கு தாய் மொழி தெலுங்கு கலைஞர் கருணாநிதிக்கு தாய்மொழி தெலுங்கு இவர்கள் இருவரும் திராவிடம் என்ற பெயரை மாற்றி அதன் மூலம் முதல்வராகினார்கள் இதுதான் உண்மை நிலை இப்படிக்கு கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க முன்னாள் துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் வி எஸ் வெங்கடேசன் பிகாம் பி எல் இந்த உண்மை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த பதிவிறை கொடுத்துள்ளே விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்றுதான் பெயர் வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தமிழை தமிழனை அடையாளம் காட்டும் கட்சிகள் மீதி எல்லாம் நான்கு மொழி கொண்ட திராவிடம் என்று சொல்லை தூக்கி பிடித்து இன்றைய திமுக ஆட்சி செய்கிறது திராவிட மாடல் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதாக தமிழக வெற்றி கழகம சூளுரைத்துள்ளது


God yes Godyes
அக் 23, 2024 22:28

தமிழ் சங்கங்களை நடத்தியவர்கள் தமிழர்கள். திராவிடர் என்ற புனை பெயர் அநாகரிகமான திருத்த மற்ற மொழி பேசிய பழங்குடி கோண்டாவானா ஆதிவாசிகள்.


RAVINDRAN.G
அக் 22, 2024 17:56

தமிழாலும் திராவிடர்களாலும் பயனில்லை . உழைத்தால் மட்டுமே பயன் .


Anbu Raj
அக் 22, 2024 19:28

இவர்தான் ஒரிஜினல் சங்கி நீ ட்ராவிடனும் இல்ல தமிழனும் இல்ல சங்கிப்பயலே


Ramesh
அக் 22, 2024 17:52

அதெல்லாம் ஒன்றுமில்லை. 25 சதவீதம் தெலுங்கர்களும் 20 சதவீதம் சிறுபான்மையிரும் தான் நிர்ணயிக்கிறார்கள். தமிழன் வாயில் விரல் வைத்துக் கொண்டு ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் அலைவர்.


sundarsvpr
அக் 22, 2024 16:56

எதுவும் கதைக்கு உதவாது. திராவிட வேதம் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பாடிய பிரபந்தங்கள். இவைகளை தூஷிப்பவர்கள் திராவிட விரோதிகள். திருக்கோயில்கள் நிலைத்து நிற்கின்றன. கோயில் சொத்தை அபகரிப்பவர்கள் திராவிட விரோதிகள். இதனை மறைக்கத்தான் திராவிட மாடல்.


saiprakash
அக் 22, 2024 16:54

திராவிடம் ,தமிழ் பிடிக்காத சங்கிகள் பெயரில் இருக்கும் எட்டப்பர்கள் உடனடியாக UP கிளம்பவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை