உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; ஓட்டுனர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; ஓட்டுனர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: 'ஆட்டோக்களுக்கு அரசு புதிய கட்டணம் நிர்ணயிக்காததால், நாங்களே கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம். வரும் 1ம் தேதி முதல் புதிய கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்குவோம்' என, ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டமைப்பு தெரிவித்துஉள்ளது. தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை, 2013ம் ஆண்டு அரசு மாற்றி அமைத்தது. முதல் 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா, 12 ரூபாய் காத்திருப்பு கட்டணம் அனுமதித்து, போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது.

கூடுதல் கட்டணம்

இந்த கட்டணம் மாற்றியமைத்து, 12 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்நிலையில், அதிருப்தியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டணத்தை அவர்களே மாற்றியமைத்துஉள்ளனர். அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜாஹீர் ஹுசைன், வெற்றிவேல் ஆகியோர் அளித்த பேட்டி: பெட்ரோல், உதிரி பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த தொழிலை நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கும் வரை, சென்னையில் பிப்., 1 முதல் குறைந்தபட்ச கட்டணமாக, 1.8 கி.மீ.,க்கு 50 ரூபாய் என வசூலிக்க உள்ளோம். அதேபோல், கூடுதல் கி.மீ.,க்கு 18 ரூபாய், 5 நிமிடத்துக்கு மேல் காத்திருப்பு கட்டணமாக, நிமிடத்துக்கு 1.50 ரூபாய் வசூலிப்போம். இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை, பகல் நேர கட்டணத்தில், 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். போக்குவரத்து துறை அமைச்சர், இதுவரை எங்களது கோரிக்கை குறித்து பேசவில்லை.

ஓலா, ஊபர்

தமிழகத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி சேவைகளை வழங்கி வரும் ஓலா, ஊபர் நிறுவனங்கள், ஓட்டுனர்களிடம் இருந்து 25 சதவீதம் வரை, கமிஷனாக எடுத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற நிறுவனங்களான, 'நம்ம யாத்திரி, டாக்ஸீனா' நிறுவனங்கள் போன்றவை, ஒரு நாளைக்கு ஆட்டோக்களுக்கு தலா 25 ரூபாய், 35 ரூபாய், கால் டாக்ஸிகளுக்கு 45 ரூபாய், 75 ரூபாய் என, சந்தா மட்டுமே வசூலிக்கின்றனர். எனவே, சென்னையில் வரும் பிப்., 1 முதல் ஓலா, ஊபர் நிறுவனங்களில் ஆட்டோ, கால் டாக்சிகளை இயக்க மாட்டோம். அதற்கு பதிலாக, 'நம்ம யாத்திரி, டாக்ஸீனா' நிறுவனங்களில் இயக்கப்படும். புதிய ஆட்டோ கட்டணத்துக்கும், ஓலா, ஊபர் நிறுவனங்களை புறக்கணிக்கவும் சென்னையில் 80 சதவீதம் ஓட்டுனர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

மோகனசுந்தரம் லண்டன்
ஜன 30, 2025 12:58

இவன்கள் எல்லாம் கட்டணத்தை எவ்வளவு கூட்டினாலும் மீட்டர் போடாமல் எடுத்தவுடன் நூற்றுக்கணக்கான ரூபாய்களை கேட்பார்கள். இப்படி அயோக்கியத்தனம் செய்யும் இவர்களில் ஒருவனாவது வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறானா. அடாவடியாக சம்பாதிக்கும் பணம் அநியாயமான முறையில் போகும்.


Gopinath Poongavanam
பிப் 01, 2025 19:50

ஐயா தர்மபிரபு தாங்கள்,, என்னத்தொழில் செய்தால் முன்னேறலாம் சொல்லுங்களேன்,,,


anantharaman
ஜன 30, 2025 11:12

ஆட்டோ கட்டணம் ஆட்டோ ஓட்டுனர் மாற்றுவார் என்பது கேலிக்குரியது. எந்த மீட்டர் காட்டும் கட்டணம் வாங்குது? மீட்டரே படாது மனம் போன கட்டணம் ஈட்டுவது இவர்கள் வழக்கம். அரசும் போலீசார் பங்கு இதில். நாடு உருப்படவே செய்யாது.


ram
ஜன 30, 2025 10:59

இவனுக தமாஷு தாங்க முடியவில்லை, ஏற்கனவே அடாவடியாக வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள் புதிய கட்டணத்தை விட , ஜஸ்ட் ஒன்னு கிலோமீட்டருக்கு நூறில் இருந்து நுற்றிஅம்பது வரை வசூல் செய்கிறார்கள்.


மதுரை வாசு
ஜன 30, 2025 10:33

சான்ஸே இல்லை ப்ரோ. புதிய கட்டணத்தை சொல்லி இன்னும் நிறைய புடுங்குவார்கள். சென்னை சென்ட்ரலிலிருந்து எக்மோருக்கு கூசாமல் ₹150-200 கேட்கிறார்கள் இந்த கண்ணியமிகு ஏழை பங்காளி கம்யூனிஸ்ட் ஆட்டோ ட்ரைவர்கள்


Varadarajan Nagarajan
ஜன 30, 2025 09:21

தற்பொழுதுள்ள கட்டணம் இதைவிட அதிகம்தான். எனவே பல இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் குறையுமா?


Kannan Chandran
ஜன 30, 2025 08:45

2023-ல் இருந்தே ராமநாதபுரத்தில் குறைந்த பட்சமே 60 ரூபாய், புதிதாக வருபவர்கள் 100ரூபாய் கொடுத்தால் சில்லரை இல்லை என்பார்கள், ஆக குறைந்த பட்சம் 100 என்பது சொல்லப்படாத கட்டணம்..


visu
ஜன 30, 2025 07:46

உறுமீன் வருமென காத்திருந்ததாம் கொக்கு என்பது போல ஒரு ஏமாந்த பயணி கிடைத்தால் போதும் என காத்திருப்பார் ஆட்டோக்காரர்கள் ஏற்கனவே அவர்கள் வாங்கும் கட்டணம் இந்த கட்டணங்களை விட அதிகம் இதை வாங்கினால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்


Kasimani Baskaran
ஜன 30, 2025 07:29

சிறப்பான தானியங்கும் நிர்வாகம். பாராட்டுகள்.


Subramanian
ஜன 30, 2025 06:32

As if they are already ging as per meter, they are revising the rates. They never run autos as per their t.


N Subramanian
ஜன 30, 2025 04:57

ஆட்டோ என்னிக்கு மீட்டர்படி ஓடியது. அத்தனை ஆட்டோவிலும் ஏதாவதொரு கட்சி கொடி அல்லது தலைவர் படம் பெயர் இருக்கும். ஒருத்தனும் ஒண்ணும் கேட்கமாட்டான் எனவே மீட்டர்என்பது வேண்டாத ஆணி.


புதிய வீடியோ