உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதீஷ்குமார் சென்றதால் தே.ஜ., கூட்டணிக்கு தான் பாதிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்

நிதீஷ்குமார் சென்றதால் தே.ஜ., கூட்டணிக்கு தான் பாதிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ., கூட்டணி பக்கம் சென்றதால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் பாதிப்பே தவிர, இண்டியா கூட்டணிக்கு பலன் தான் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டில்லி அரசு புதிய சோலார் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை 2016ன் கொள்கை நடைமுறையில் இருந்தது. இது நாட்டிலேயே முற்போக்கான திட்டம். டில்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம், 400 யூனிட் வரை மின்சாரத்திற்கு பாதி கட்டணம், 400 யூனிட்களுக்கு மேல் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய சோலார் கொள்கையின்படி, வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துபவர்கள், எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தினாலும், கட்டணம் வசூலிக்கப்படாது. இதன் மூலம், மாதத்திற்கு ரூ.700 முதல் 900 வரை சம்பாதிக்கலாம். பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ., கூட்டணி பக்கம் சென்றிருக்க கூடாது என நினைக்கிறேன். அவர் செய்தது தவறானது; இது ஜனநாயகத்திற்கும் சரியல்ல. அவரின் பா.ஜ., பக்கம் சென்றதால் பீஹாரில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் பாதிப்பே தவிர, இண்டியா கூட்டணிக்கு பலன் தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி