உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மதுரையில் அழகிரி வீட்டிற்கு 15 ஆண்டுகளுக்கு பின் சென்ற துர்கா

 மதுரையில் அழகிரி வீட்டிற்கு 15 ஆண்டுகளுக்கு பின் சென்ற துர்கா

மதுரை: மதுரையில், டி.வி.எஸ்., நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று முன்தினம் சென்றார். தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே 'நீயா நானா' போட்டி நிலவியது. கடந்த 2014ல், அழகிரி பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை எழுந்து, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது வரை அழகிரி, அவரது ஆதரவாளர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதற்கிடையே, கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., தலைவரான ஸ்டாலின், கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அதன்பிறகு, பலமுறை மதுரைக்கு ஸ்டாலின் வந்தாலும், கடந்த ஜூன் மாதம் தான், அழகிரி வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, மதுரைக்கு நேற்று முன்தினம் வந்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, அழகிரி வீட்டிற்கு சென்றார். அங்கு அழகிரி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அழகிரி மகன் திருமணத்துக்காக, கடந்த 2010ல் அவரது வீட்டுக்கு சென்ற துர்கா, 15 ஆண்டுகள் கழித்து நேற்று முன்தினம் சென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி