உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவின் கல்வி மையமாக ஜொலிக்கும் தமிழகம்: முதல்வர் பெருமிதம்

இந்தியாவின் கல்வி மையமாக ஜொலிக்கும் தமிழகம்: முதல்வர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிப்பது பெருமையான தருணம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.மத்திய கல்வி அமைச்சகம் 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும், டில்லி ஐஐடி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன. பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டில்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

பெருமைக்குரியது

இந்நிலையில், சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உயர்கல்வி தரவரிசை பட்டியலில் நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது. இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிப்பது பெருமையான தருணம். உயர்கல்வி நிறுவனங்களில் உயர்தரத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படுவது பெருமைக்குரியது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு பெருமையான தருணம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Ashwin Playz
ஆக 15, 2024 14:26

அது தான் வேஸ்ட் தேர்வு அ ஆகிடுசே அய்யா


sundaran manogaran
ஆக 13, 2024 23:28

அப்புறம் ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீங்க முதல்வர் அய்யா


sundaran manogaran
ஆக 13, 2024 23:26

ஆசிரியர் இல்லாத பள்ளிகளை வைத்துக்கொண்டு கல்வியில் தமிழகம் ஜொலிக்கிறது என்பது நல்ல நகைச்சுவை.பாவம் அவர் என்ன உண்மை தெரிந்தா சொல்கிறார்... வசனத்தை படிக்கிறார்


theruvasagan
ஆக 13, 2024 17:10

ஐஐடியை வைத்து பெருமை கொண்டாட முடியாது. ஆனால் எய்ம்ஸ் போல திகார் ஜெயிலுக்கும் ஒரு கிளை தமிழ்நாட்டில் வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைத்து அது நிறைவேறினால் அதில் நுழைய எங்களுக்குத்தான் முதல் உரிமை என்று வேண்டுமானால் பெருமை பேசிக் கொள்ளளலாம்.


Anand
ஆக 13, 2024 16:50

பொய்யுரைப்பதில் அப்படி என்ன பெருமை இருக்கு?


தத்வமசி
ஆக 13, 2024 16:20

தமிழக அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனம் ஏதாவது பட்டியலில் உள்ளதா ?


theruvasagan
ஆக 13, 2024 15:48

தமிழகத்துக்கு பெருமை என்றாலும் அதில் இவர்கள் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. ஒன்று.அது மத்திய அரசு கல்வி நிறுவனம். இரண்டு பாடத்திட்டமும் மாநில அரசால் வரையறுக்கப்பட்டதல்ல. மூன்று. அதில் பயிலும் மாணவர்கள் இந்தியாவின் பல மாநிலங்ளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தமழக மாணவர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருக்கும் வாய்ப்பு குறைவு. நான்கு. மாணவர்கள் சேர்க்கை தரமான தேர்வு முறை மூலமே. அதில் சமச்சீர் தயாரிப்புகள் உள்ளே நுழைவது அரிதிலும் அரிது. ஆக இீதல்லாம் தங்களால்தான் நடந்த மாதிரி பெருமை கொண்டாடுவதற்கு இவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.


ஆரூர் ரங்
ஆக 13, 2024 15:36

தேர்வுகள் எளிமையாக ஆகிவிட்டதால் டிஓஜி கூட பிஏ பட்டம் வாங்கி விடுகிறது. ஆனாலும் பிறப்பின் அடிப்படையில்தான் அதற்கும் மதிப்பு. இல்லாட்டி குரல் கொடுத்து 200 பிஸ்கட் பெறும் வேலைக்கு மட்டுமே.


vijai
ஆக 13, 2024 15:25

ஐஐடி என்பது மதியரசுக்கு கட்டுப்பாட்டில் வரும் என்று அவருக்கு தெரியாது போல இருக்கு எல்லாத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டி பழக்கம் ஆயிடுச்சு அந்த பழக்கம் பேசுறாரு ??


Sainathan Veeraraghavan
ஆக 13, 2024 15:22

இந்த கல்வி பட்டியலே பணம் கொடுத்து போடப்படும் ஒன்று. எல்லா நாடுகளிலும் இந்த தில்லு முல்லு நடக்கிறது. மக்கள் ஏமாறுகிறார்கள் .


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ