உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறங்குமுகத்தில் முட்டை விலை

இறங்குமுகத்தில் முட்டை விலை

நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 257 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு தினங்களில் முட்டை விலை, 11 காசுகள் சரிந்துள்ளது. நாமக்கலில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 262 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 5 காசுகள் குறைத்து, 257 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 6ம் தேதி முட்டை விலை, 268 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து, 7ம் தேதி, 6 காசுகள் குறைந்து, 262 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த விலை தொடர்ந்து மூன்று தினம் நீடித்து வந்த நிலையில், அதன் விலை, 5 காசுகள் குறைத்து, 257 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ