உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் வாக்குறுதிகள்; வெள்ளை அறிக்கை தாருங்கள்; தி.மு.க.,வுக்கு ராமதாஸ் கேள்வி

தேர்தல் வாக்குறுதிகள்; வெள்ளை அறிக்கை தாருங்கள்; தி.மு.க.,வுக்கு ராமதாஸ் கேள்வி

விழுப்புரம்: தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க.,வுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டர் ரூ.100 வழங்கப்படும். சட்டசபை நிகழ்ச்சி நேரலை என தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளது. பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றாமல் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qfpx57ic&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் நேரத்தில், விலை மதிக்க முடியாத ஓட்டுக்கள், பொன்னான ஓட்டுக்கள், உயிரிலும் மேலான ஓட்டுக்கள் என கேட்கின்றனர். இந்த 3 சொற்களும் எந்த இடத்திலாவது பொருத்தமாக இருக்கிறதா? எந்த கட்சிக்காவது பொருத்தமாக இருக்கிறதா? இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை