உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திமுக அரசு " - இ.பி.எஸ். குற்றச்சாட்டு

" விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திமுக அரசு " - இ.பி.எஸ். குற்றச்சாட்டு

சென்னை: விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார்.

எந்த பயனும் இல்லை

இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது குறித்து பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தவில்லை. டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qrwaaurv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பயிர்கள் கருகின

தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சரி செய்து கொடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளுக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்த பின் தி.மு.க., அரசு மறந்துவிட்டது. நீர் கிடைக்காததால் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகின. இழப்பீடும் அறிவிக்கவில்லை. வருங்காலத்தில் குறுவை சாகுபடி விவசாயிகளை பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தி நீர் திறக்கப்பட்டதால் சம்பா, தாளடி பயிர்கள் காய்ந்து சேதமடைந்துள்ளன. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இ.பி.எஸ்., வீட்டிற்குள் மர்மநபர் நுழைந்தார். இ.பி.எஸ்., கார் உள்ளே சென்றபோது மர்மநபரும் உள்ளே நுழைந்ததாக தெரிகிறது. மர்மநபரை மடக்கி பிடித்த பாதுகாவலர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

இ.பி.எஸ்., உடன் உரையாடிய ஜி.கே.மணி

சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேசினார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ம.க., இதுவரை யாருடன் கூட்டணி என அறிவிக்கவில்லை.

வழக்கு வாபஸ்

சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இ.பி.எஸ்., வாபஸ் பெற்றார். சமீபத்தில் புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை