உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கம்பம் மாற்ற ரூ.15,000 லஞ்சம்: கிருஷ்ணகிரியில் மின் வாரிய அதிகாரி கைது

மின் கம்பம் மாற்ற ரூ.15,000 லஞ்சம்: கிருஷ்ணகிரியில் மின் வாரிய அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பத்தை இடம் மாற்ற ரூ.15,000 லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் மின்வாரிய உதவி பொறியாளர் உதயகுமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், வெங்கடேசபுரம் அடுத்த இனகபீரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கதிரப்பா, 49. அவரது நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக, நிலத்தின் நடுவே அமைந்துள்ள எல்.டி., லைன் மின் கம்பத்தினை அகற்றி இடமாற்றம் செய்து ஹச்.டி லைன் மின் கம்பம் அமைக்கவேண்டி விண்ணப்பித்தார்.ஆன்லைன் மூலம் கட்டணம் ரூ.2145 அரசுக்கு செலுத்தி மின் பகிர்மான கழகம் அத்திமுகம் உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளார். 15 நாட்களுக்கு முன் அலுவலகத்திற்கு சென்று மின் உதவி பொறியாளர் உதயகுமாரை நேரில் சந்தித்து மின் கம்பத்தினை மாற்றி அமைப்பது பற்றி கேட்டுள்ளார். அப்போது, அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு எனக்கு ரூ.15,000 கொடுத்தால், உடனடியாக மேற்படி கம்பத்தை மாற்றிதருவதாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி இன்று காலை கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியிடம் புகார் அளித்துள்ளார்.வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ரசாயனம் தடவிய பணம் ரூ.15,000 த்தை புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். மேற்படி பணத்தை புகார்தாரரிடமிருந்து உதவி பொறியாளர் உதயகுமார் லஞ்சமாக வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவரிடமிருந்து சில ஆவணங்களை கைப்பற்றி மேல் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Good Time
ஜூலை 17, 2025 22:47

ஊழல் அரசு. ஊழல் அதிகாரிகள். ஊழல் நாடு. பாவப்பட்ட பொதுமக்கள்.


Dr.Joseph
ஜூலை 17, 2025 03:52

லஞ்சம் கொலை குற்றமாக கருதப்பட்டு உயிர் போகும் காலம் வரையிலும் ஆயுள்தண்டனை கொடுக்க வேண்டும்


Selvaradha Shandhi
ஜூலை 14, 2025 12:27

சூப்பர்


Vasudeva
ஜூலை 11, 2025 19:20

லஞ்சம் என்ற விஷயத்துக்கும் உரிய கால வரம்புக்கும் நேரடி தொடர்பு உள்ளது. விரைந்து வேலை நடக்கவில்லை என்றால்தான் லஞ்சம் என்ற ஒன்று தலைகாட்டுகிறது,அரசு ஊழியர் ஒவ்வொரு நிலையிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காலவரம்பை நிர்ணயம் செய்து வெளிப்படையாக எல்லோரும் டிராக் செய்து அறிந்துகொள்ளும் வகையில் வழிவகை செய்தால் ஓரளவு தடுக்கலாம், வேண்டுமென்றே தாமதம் செய்தால் வேலை போய்விடும் என்ற விதியை கட்டாயமாக்கனும்


D Natarajan
ஜூலை 11, 2025 08:14

லஞ்சம் வாங்கி பிடிபட்டவுடன் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். தமிழ் நாடு லஞ்சத்தில் நீந்துகிறது. தலை முதல் வாழ் வரை


Padmasridharan
ஜூலை 11, 2025 08:03

அநியாயத்தை எதிர்த்து புகாரளிக்கும், கிராமத்தில் இருப்பவர்களுக்குள்ள தைர்யம் நகரவாசிகளுக்கு இருப்பதில்லை.. அது சரி. . சாமியோவ் இதென்ன "லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி" உங்க செய்தியில என்ன சொல்ல வர்றிங்க.. "இஷ்டப்பட்டு லஞ்சம் கொடுக்கணும்னா.. "


R VENKATARAMANAN
ஜூலை 11, 2025 06:50

Such officials in any cadre should be placed under suspension immediately and forfeit their salary, etc, till the final results in the case, and if they are found guilty, their pension and gratuity should also be denied.


Kasimani Baskaran
ஜூலை 11, 2025 03:59

இதுகளுக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கொடுத்தால் கூட தவறில்லை..


தாமரை மலர்கிறது
ஜூலை 11, 2025 00:38

கோட்டாவில் நீந்திய லஞ்ச ஷாக் கொடுக்கும் ஈல் மீன்.


Raghavan
ஜூலை 10, 2025 22:57

தினம் ஒரு லஞ்சம் வாங்குபவர் பிடிபடுகிறார். இவை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மூலம் செய்தியாக வருகிறது. இதை படித்த, பார்த்த பின்பும் லஞ்சம் வாங்குவது அரசு ஊழியர்களிடம் கொஞ்சம் கூட குறைவதாக தெரியவில்லை. பிடிபடுவது என்னமோ ஒருவர் அல்லது இரண்டு பேர்கள்தான் ஆனால் பிடிபடாமல் வாங்குபவர்கள் ஏராளம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை