உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி விடுமுறையால் சரிந்தது மின் நுகர்வு

தீபாவளி விடுமுறையால் சரிந்தது மின் நுகர்வு

சென்னை:அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால், தீபாவளி தினத்தன்று தமிழக மின் நுகர்வு, 10 கோடி யூனிட் குறைந்து உள்ளது.ஒருநாள் முழுதும் அதாவது, 24 மணி நேரமும் தமிழகம் முழுதும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, கோடைக் காலத்தில் அதிகரிக்கிறது. இந்தாண்டு ஏப்., 30ல், 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தன. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.தீபாவளியை முன்னிட்டு, கடந்த மாத இறுதியில் அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் முழுவீச்சில் செயல்பட்டன. சில மாவட்டங்களில் மழை பெய்துள்ள போதிலும், அந்த வாரத்தில் தினசரி மின் நுகர்வு சராசரியாக, 36 கோடி யூனிட் என்றளவில் இருந்தது. அதன்படி அக்., 29ல், 36.20 கோடி யூனிட்களாக இருந்தன. தீபாவளிக்கு முந்தைய நாள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால், 30ல் மின் நுகர்வு சற்று குறைந்து, 33.78 கோடி யூனிட்களாக இருந்தது. நேற்று முன்தினம் தீபாவளியை, மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். அன்று, அனைத்து அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. வீடுகளில் மட்டுமே மின் பயன்பாடு இருந்தது. இதனால், தீபாவளி தினத்தன்று மின் நுகர்வு, 26.42 கோடி யூனிட்களாக சரிவடைந்தது. இது, அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது, 7.36 கோடி யூனிட்களும், செவ்வாய் கிழமையுடன் ஒப்பிடும்போது, 9.81 கோடி யூனிட்களும் குறைவு. இதனால், மின் உற்பத்தி குறைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ