வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐயாயிரம், பத்தாயிரம் வாங்கினால் லபக்குன்னு பிடித்து விடுவோம். ஆயிரம், லட்சம் கோடிகளில் கொள்ளையடித்தால் அவர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்ப்போம். பெத்தாச்சி அம்மனே துணை.
அலங்காநல்லுார்: மின்கம்பியை மாற்றியமைக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை கூடல் நகர் மின்வாரிய ஊழியர் கணேசனை 52, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மதுரை கோவில்பாப்பாகுடி பி.ஆர்.சி., காலனி சாமுவேல் 56. டெக்ஸ்டைல் ஏஜன்ட் ஆக உள்ளார். இவர் வீட்டின் முன் ஆபத்தான முறையில் சென்ற உயர் மின்னழுத்த கம்பியை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க கூடல் நகர் மின்வாரிய அலுவலகத்தில் 10 மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தார். நீண்ட இழுபறிக்கு பின் அவரை தொடர்பு கொண்ட கூடல்நகர் மின்வாரிய போர்மேன் சமயநல்லுாரை சேர்ந்த கணேசன் ரூ.5ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து சாமுவேல் ,மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். நேற்று கோவில்பாப்பாகுடி ரோட்டில் சாமுவேலிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கணேசன் லஞ்சம் பெற்றபோது அவரை ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாரதிப்ரியா, சூரியகலா, குமரகுருபரன் கைது செய்தனர்.
ஐயாயிரம், பத்தாயிரம் வாங்கினால் லபக்குன்னு பிடித்து விடுவோம். ஆயிரம், லட்சம் கோடிகளில் கொள்ளையடித்தால் அவர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்ப்போம். பெத்தாச்சி அம்மனே துணை.