உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்று உதார் உதயநிதி நயினார் நாகேந்திரன் கிண்டல்

வெற்று உதார் உதயநிதி நயினார் நாகேந்திரன் கிண்டல்

கோவை: ''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை, போலீஸ் துறையால் பராமரிக்க இயலவில்லை,'' என, தமிழக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.கோவை விமான நிலையத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 'டாஸ்மாக்' ஊழல் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். இதில் தொடர்புடைய துணை முதல்வரின் நண்பர்கள் ரித்தீஷ், ஆகாஷ் லண்டன் ஆகியோர் சென்று விட்டதாக சொல்கிறார்கள்.துணை முதல்வர் உதயநிதி 'ஈ.டி.,க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என அமலாக்கத்துறை ரெய்டு குறித்து சொல்கிறார். 2011ல் தேர்தல் நடந்தபோது, கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, அறிவாலய மாடியில் ரெய்டு நடந்தது; கீழே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு மட்டும் ரெய்டுக்கு பயந்து, பேச்சுவார்த்தை நடத்தினார்களா என தெரியவில்லை. அப்போதிலிருந்தே உதயநிதிக்கு, ரெய்டு என்றாலே பயம்தான். அதனால்தான், இப்போதும் சோதனை குறித்து அலறலாக பேசிக் கொண்டிருக்கிறார். இருட்டில் போகும் மனிதன், பயத்தில் பாட்டுப்பாடி செல்வது போல, அமலாக்கத்துறை மட்டுமல்ல; யார் ரெய்டு என்றாலும், அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என பயந்துகொண்டே சொல்கிறார், வெற்று உதார் உதயநிதி.ரித்தீஷும், ஆகாசும் அவருடைய நண்பர்கள் தானே. அவர்கள் ஏன், அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பின், வெளிநாட்டுக்கு ஓடினர். உதயநிதி இதற்கு என்ன பதில் சொல்வார்?ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தேவைப்பட்டால் கொடுப்போம். தங்க நகை கடனுக்கு விதித்துள்ள, புதிய விதிமுறைகளால் ஏற்படும் சிக்கல்களை நிதியமைச்சரிடம் பேசி, விதிமுறைகளை எளிதாக்க முயற்சி செய்வோம்.மதுரையில் ஜூன் மாதம், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. உலகம் முழுதும் இருந்து, பக்தர்கள் அந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். ஸ்டாலின் ஆட்சி விரட்டப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JayaSeeli
மே 28, 2025 15:39

இன்றைய கோட்டா ஓவர்........ அண்ணா ஸ்டைல்....


Ramesh Sargam
மே 28, 2025 13:24

உதார் எல்லாம் தமிழக எல்லைக்குள் மட்டும்தான். ஒரு அடி எடுத்து மற்ற மாநிலங்களில் வைக்கட்டும்... அவ்வளவுதான்? குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடஇந்தியாவில் இவன் ஆட்டம், உதார் எல்லாம் செல்லாது.


Raj Kamal
மே 28, 2025 18:52

எல்லோருக்குமே அவ்லோ தான் லிமிட்டு, ரமேசு . யாரும் இருக்கும் இடத்தில இருந்து விட்டால் எல்லாம் சௌக்யமே.


sankaranarayanan
மே 28, 2025 10:09

ஆகாஷும் ரித்திஷ்ம் வெளி நாட்டுக்கு தப்பவில்லை உள் நாட்டிலேயே பத்திரமாக துணை முதல்வரின் அனுதாப அலைகளோடு வேலை நடந்து கொண்டிருக்கிறது இதற்கும் போலீசு உறுதுணை கண்டும் காணாததுமாகவே இருப்பார்கள் ஒரு நாள் வெளிவரும் அப்போது எல்லாருமே சிக்குவார்கள் பெருந்தொகை இவர்களுக்கு கைமாறியுள்ளதால் இவர்களை எளிதில் பிடிக்கவே முடியாது உள்நாட்டிலேயே அடைக்கலம் கொடுத்த கட்சிக்கார்கள் விபரம் பிறகு வெளிவரும் அவர்களையும் மன்னித்து விடுவார்கள்


baala
மே 28, 2025 09:53

நீங்க


மூர்க்கன்
மே 28, 2025 17:07

ஊழை உதார் நயினார்


புதிய வீடியோ