உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை வழக்கு: தி.மு.க., - எம்.பி., ராஜா ஆஜர்

அமலாக்கத்துறை வழக்கு: தி.மு.க., - எம்.பி., ராஜா ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ஆ.ராஜா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், 2015ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2022ல், இந்த வழக்கில் ராஜா,கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய்சடரங்கனி மற்றும் இரு நிறுவனங்கள் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட, 579 சதவீதம் அதிகமாக, 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக சி.பி.ஐ.,கூறியிருந்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், ராஜா உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.இந்த வழக்கு, சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வேலவன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ராஜா நேரில் ஆஜரானார். வழக்கு ஆவணங்களை அவருக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வரும் செப்., 18க்கு விசாரணையை தள்ளிவைத்தார்.இதேபோல, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கிலும், ராஜா உள்ளிட்ட அனைவரும், நீதிபதி சி.சஞ்சய் பாபா முன் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Gokul Krishnan
ஆக 20, 2024 09:01

இந்த வழக்கு 3034 இல்லாவது தீர்ப்பு வருமா


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஆக 20, 2024 19:12

நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.


tmranganathan
ஆக 20, 2024 08:12

எழில் வேலவன் நீதிபதியா? அப்போ முக சொன்ன படி நீதி வாங்கப்படும்னு தேய்ந்தாயிற்று . தமிழினம் ஊழல் rajaakkal.


RAJ
ஆக 20, 2024 08:01

உள்ள போட்டு குமுறுங்க அய்யா.. .. மஹாராசுவுக்கு வாய்ய்ய்ய்ய்ய்ய்ய் பெரிய காவாய்ய்ய்ய்ய்ய்ய் ..... பரம்பர பணக்காரன் மாதிரியே பீல் பண்றவரு... ...


VENKATASUBRAMANIAN
ஆக 20, 2024 07:57

இந்த ஒரு வழக்கை விரைந்து முடித்து தண்டனை வாங்கி கொடுத்து சொத்துக்களை பறிமுதல் செய்தால் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். இல்லையென்றால் பத்தோடு பதினணொன்று என்ற கதைதான்.


N.Purushothaman
ஆக 20, 2024 07:31

சமூக நீதிக்கு உதாரணமான ஆண்டிமுத்து ராசா ஒரு பட்டியல் இனத்தவர் என்பதால் அவர் கொள்ளையடிக்கூடாதா ? லஞ்சம் ஊழல் செய்ய கூடாதா ? சொத்து சேர்க்க கூடாதா ? 2 ஜி வழக்கில் குற்றப்பத்திரிக்கையை மொழி பெயர்த்து கொடுத்தது போல இதிலும் கொடுக்க வேண்டும் .....தமிழை தவிர மற்ற மொழிகள் அது ஆங்கிலமே ஆனால் கூட சமூக நீதியின் கீழ் வராது என்பதை எப்போது இந்த நீதிமன்றமும் ஆதிக்க சக்திகளும் உணர போகின்றன ?


கோவிந்தராசு
ஆக 20, 2024 06:44

பாலாஜி ஏமாந்து சிக்கிட்டான் இவன் தப்பிட்டான்


பாமரன்
ஆக 20, 2024 06:41

கராபுரா இந்தியில் பெயரிடப்பட்ட சட்டம் புரியலை... அதுக்காக ஒரு வாய்தா எப்போ...? எனிவே வரும் 2047ல இந்தியா வல்லரசு ஆகிடும்னு எங்க ஜி சொல்லியிருக்காப்ல...‌அதுக்குள்ள கேஸை முடிச்சு டிஸ்மிஸ் பண்ணுவீங்கல்ல...?


Sathyanarayanan Sathyasekaren
ஆக 20, 2024 07:59

ஜெகதலப்ரதாப கொள்ளைக்காரனை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியுமா, இவனோட குரு யாரு? மலை முழுங்கி மகாதேவன் அல்லவா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை