உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவாதம் வேண்டாம்.. மத்திய அரசுடன் பேசுங்கள்! தமிழக அரசுக்கு இ.பி.எஸ். அட்வைஸ்

விவாதம் வேண்டாம்.. மத்திய அரசுடன் பேசுங்கள்! தமிழக அரசுக்கு இ.பி.எஸ். அட்வைஸ்

சென்னை; புதிய கல்விக் கொள்கையில் பயனற்ற விவாதங்களை தவிர்த்து, மத்திய அரசுடன் தமிழக அரசு கலந்தாலோசனை செய்து, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில ஷரத்துக்கள் உள்ளன என்று பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்படியும், அதை தமிழகம் எந்த மாற்றமுமின்றி பின்பற்ற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வற்புறுத்துகின்றனர். இதுவரை தமிழகத்தில் சிறப்பான சாதனைகளை கல்வித் துறையில் அடையக் காரணமாக பின்பற்றப்பட்டுவரும் இரு மொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தித் திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியால், தமிழக மக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.இந்தச் சூழ்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் 'PM SHRI' திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் அறிவு சார்ந்த தலைவர்களால், இருமொழிக் கொள்கையின் அவசியம் மற்றும் சிறப்பு பற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில் தான் மத்திய அரசும் அலுவல் மொழிச் சட்டம் 1963ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தது.இத்தகைய அறிவுசார்ந்த முடிவினால்தான் தமிழகத்தில் பயிலும் மாணவர்கள் தாய்மொழிப் புலமையுடன், ஆங்கில மொழியையும் கற்று, இன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகம் முழுவதிலும் பல உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், தொழில்களையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.'உலகமயமாக்கல்' உள்ள இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற்றதால் தான் உலக அளவில் இன்று அவர்கள் கோலோச்சி வருகின்றார்கள். ஆங்கிலம் அல்லாத பிற மாநிலங்களிலும், நாடுகளிலும்கூட அந்தந்த மொழிகளை தேவைக்கேற்ப கற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள்.எனவே தமிழகத்திற்கு, இந்த காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலைப்பாட்டில் அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. மத்திய அரசு இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும்.'சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம்' போன்றவற்றுக்கான நிதியை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, நிதியை விடுவிக்க மறுப்பது தமிழகத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும். எனவே, மத்திய அரசு இது போன்ற தன்னிச்சையான போக்கை, மக்கள் நலன் கருதி மாற்றிக்கொண்டு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷரத்துக்கள் பற்றி விரிவான கலந்தாலோசனை மேற்கொண்டு ஒரு சுமூக முடிவை எடுக்க வேண்டும்.அதேசமயம், கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் SSA போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.மாநில அரசு பொதுவெளியில் இதுபோன்ற பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக மத்திய அரசை வலியுறுத்தி கலந்தாலோசனை செய்து, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளை பார்லி.யில் விவாதிப்பதற்குத்தான் தமிழக மக்கள், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பி உள்ளார்கள் என்பதையும், தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
பிப் 22, 2025 10:38

போய்ப்.பேசுங்க. கூடவே இ.பி.எஸ் சையும் கூட்டிட்டுப் போங்க.


vijai hindu
பிப் 22, 2025 10:20

பங்காளிக்கு சப்போர்ட். இது மாணவர்கள் பிரச்சனை அவர்களுக்கு விருப்பப்படி விட்டுவிட வேண்டும் நீங்கள்அரசியல் செய்வதற்கு அவர்கள் இல்லை


Ramesh Sargam
பிப் 21, 2025 20:36

இது மாணவர்கள் பிரச்சினை. ஆகையால் மாணவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று அவர்களே முடிவு செய்யட்டும். எந்த கட்சி அரசியல்வாதிகளும் இடையில் நுழைந்து குட்டையை குழப்பவேண்டாம். மாணவர்கள் அவர்களுக்கு என்ன விருப்பம் என்று நேரடியாக பிரதமருகே கடிதம் எழுதலாம். அவர்கள் விருப்பத்தை மத்திய மாநில அரசுகள் ஏற்கவேண்டும்.


Laddoo
பிப் 21, 2025 20:25

எடப்பாடி என்னாச்சு ஒங்களுக்கு? நீங்க பேசல கொடநாடு கொல கேசு பேசச் சொல்லுது. ரெட்டை எல டமால் டுமீலா?


Murugesan
பிப் 21, 2025 20:24

திருட்டு பங்காளி அயோக்கியங்க , 70 வருடங்களாக தமிழகத்தை சீரழித்த கேடுகெட்ட கேவலமான ஊழல் சுயநலவாதி கைக்கூலி கூட்டம்


Venkatesan Srinivasan
பிப் 21, 2025 22:18

இந்த எடப்பாடி கட்சியின் தலைமைப் பதவியை மட்டுமே குறிவைத்து அதிமுக ஆரம்பித்ததன் நோக்கம் கூட புரியாமல் தீயமுகாவுடன் பங்காளி உறவு பாராட்டுகின்றார். தீயமுகாவின் நோக்கம் செயல்கள் கண்டிப்பாக அதிமுகவின் வளர்ச்சிக்கு உதவாது. எடப்பாடியாரை சுற்றி இருப்பவர்கள் கண்டிப்பாக அவருக்கும் கட்சி நலனுக்கும் எதிரான செயல்படுபவர்கள் என்று புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அஸ்தமனம் தொடங்கி விடும்.


Bye Pass
பிப் 21, 2025 20:08

ஆங்கிலத்தின் மேல் என்ன பாசம் ? அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கவில்லை ..இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பை கெடுத்ததால் கம்புயூட்டர் புரட்சியில் இந்தியர்கள் ஆங்கிலத்தின் மூலம் முன்னேறினார்கள்... மும்பை டில்லி கொல்கொதா போன்ற நகரங்களில் இந்தி மொழியில் தமிழர்கள் வயிறு பிழைக்கிறார்கள்


Ray
பிப் 21, 2025 19:51

என்னாப்பா இது எடப்பாடியா அது