உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் இபிஎஸ்

உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., தரப்பு மன்னிப்பு கோரியது.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் மனு தாக்கல் செய்த இ.பி.எஸ்., பிறகு பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w9sdpi04&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛‛பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும். அந்தப்பதவி தொடர்பான மனு நிலுவையில் உள்ள போது, எப்படி பதவியை கூற முடியும்'' எனக் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, தவறுக்கு இ.பி.எஸ்., தரப்பு மன்னிப்பு கோரியது. திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஆக.,7 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Md zackaria
ஜூலை 29, 2024 09:58

உங்கள் தகுதியை நீங்களே குறைத்துக்கொள்கிறீர்கள்.. உங்கள் உயரத்தை நீங்களே அளந்து கொள்ளவும்....


Md zackaria
ஜூலை 28, 2024 20:24

பாவம் பழனிச்சாமி


Md zackaria
ஜூலை 28, 2024 20:23

நன்று


Durai Kuppusami
ஜூலை 27, 2024 07:58

வர வர இவர் காமடி பீஸ் ஆயிட்டாரு.கட்சிய நாசம் செய்யராரு..


கல்யாணராமன்
ஜூலை 26, 2024 17:10

ஈ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் இருவரும் இல்லாமல் எம் ஜி ஆர் காலத்து தலைவர் ஒருவர் கீழ் கட்சி செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கே ஏ செங்கோட்டையன் அல்லது சைதை துரைசாமி தலைமை பதவியை ஏற்கலாம். செங்கோட்டையனுக்கு ஆங்கிலம் தெரியாது, மத்திய அரசிடம் பேச முடியாது, எனவே கல்வியாளர், திறமைசாலி துரைசாமி சரியான தேர்வாக இருப்பர்.


sundarsvpr
ஜூலை 26, 2024 17:02

நீதிபதி கூறுவது சரிதான். ஊழல வழக்குகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் தி மு க அரசு முந்தைய அரசு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவதை நீதிமன்றம் ஏன் வினா எழுப்புவதில்லை.? ஊழல் விசாரணை அதிகாரியாக பல ஊழல் செய்த அதிகாரியை அரசு போடுகிறது. இதனையும் நீதிமன்றம் கண்டுகொள்வதில்லை


metturaan
ஜூலை 26, 2024 16:01

அட போங்கைய்யா.. நல்லா இருந்த கட்சியை சுயலாபத்திற்காக கூறுபோட்டு... நீங்கள் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி கொண்டதைவிட .. தொண்டர்களை ஏமாற்றி கட்சியையே கரைய வச்சுக்கிட்டு இருக்கீங்க...


Anbuselvan
ஜூலை 26, 2024 15:58

இவர்கள் மனம் விட்டு பேசி கட்சியை ஒன்று படுத்தினால்தான் அதிமுக பிழைக்கும். சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் EPS அவர்கள் ஒருங்கிணைந்து கம்யூனிஸ்ட் கட்சியை Politbereau போன்ற அமைப்பை ஏற்படுத்தினால்தான் 2026 இல் நன்கு போட்டியிட முடியும். இல்லையேல் மெல்ல இக்கட்சி சாகும்.


karutthu
ஜூலை 27, 2024 12:53

சசிகலா வேண்டாம் அவர் கட்சிக்குள் வந்தால் பொது செயலாளர் பதவி தான் கேட்பார் .ஆகவே சசிகலா அண்ணா திமுகவிற்கு வரவேண்டாம்


Venkataraman
ஜூலை 26, 2024 15:47

நல்ல ஒரு கட்சி, திமுகவுக்கு மாற்றாக, நேர்மையாக நியாயமாக செயல்படும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. ஆனால் அது எம்ஜியாருடன் தொடங்கி ஜெயலலிதாவுடன் முடிவு பெற்று விட்டதாக தெரிகிறது. இப்போது திமுவுக்கு எதிராக மக்களை நடத்திச்செல்லும் கட்சி எதுவும் தமிழகத்தில் இல்லை என்பது உறுதியாகி விட்டது. இனிமேல் கருணாநிதி வாரிசுகளுக்கு கொண்டாட்டம்தான்.


Rajah
ஜூலை 26, 2024 17:07

அது எம்ஜியாருடன் தொடங்கி எம்ஜியாருடன் முடிவு பெற்று விட்டடது என்பதுதான் உண்மை. எம்ஜிஆர் இருந்திருந்தால் ஒருபோதும் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். உண்மையில் அவர் மறைவுக்குப் பின்னர் அதிமுக அழிவு ஆரம்பமானது. இன்று முற்றாக அழியும் நிலைக்கு வந்துவிட்டது.


Velan Iyengaar
ஜூலை 26, 2024 15:07

சேர்க்கை தோஷம் ... அவங்க மன்னிப்பு கலாச்சாரம் ஒட்டிக்கிச்சி


Barakat Ali
ஜூலை 26, 2024 16:15

கருணாநிதியே கோர்ட்டில் சிலமுறை மன்னிப்புக்கேட்ட வரலாறு உண்டு ......


Duruvesan
ஜூலை 26, 2024 16:52

பர்மா பஜார்ல வியாவாரம் எப்படி போவுது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை