உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரும்புத் தோட்டம் கான்கிரீட் சாலையில் நடந்த போலி விவசாயி நான் அல்ல; முதல்வரை சாடிய இ.பி.எஸ்.

கரும்புத் தோட்டம் கான்கிரீட் சாலையில் நடந்த போலி விவசாயி நான் அல்ல; முதல்வரை சாடிய இ.பி.எஸ்.

சென்னை: கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல என்று முதல்வர் ஸ்டாலினை இ.பி.எஸ்., கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்; தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி எனபதை பெருமையாகக் கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதல்வர், விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் ஸ்டாலின் மட்டுமே. 'நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா?' நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. தமிழக மக்கள் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அ.தி.மு.க., அரசை மனதில் நிறுத்தியும், இன்று சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் இந்தியாவிலேயே அதிக அளவு கடன் வாங்கி முதலிடத்தைப் பெற்றிருக்கும் முதல்வர் ஸ்டாலினையும், தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, தி.மு.க.. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Varny Sundaram
ஜூன் 13, 2025 22:27

யாரோ எழுதி கொடுத்ததை விளங்கிக் கொள்ளாமல் வாசிக்கும் பொம்மை முதல்வருக்கு எப்படி சொன்னாலும் விளங்கவா போகிறது? வாசித்ததை திருப்பி வாசிக்க சொன்னால் கூட ஏதோ புதிதாக வாசிப்பது போலவே வாசிப்பார் சுடாலின்.


Ram
ஜூன் 13, 2025 19:51

ஐயா eps அவர்களே ஸ்டாலின் அவர்களின் பேச்சை பெரிது படுத்தாதீர்,அவர் தோல்வி பயத்தில் உளறி கொண்டிருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை