உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லிக்கு வந்தது ஏன் :இ.பி.எஸ்., பேட்டி

டில்லிக்கு வந்தது ஏன் :இ.பி.எஸ்., பேட்டி

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான இ.பி.எஸ்.,திடீரென டில்லி சென்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. டில்லியில் கட்டப்பட்டு உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை பார்க்க வந்ததாக அவர் விளக்கம் அளித்து உள்ளார்.வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஓராண்டு உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்பது பற்றிய கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2vi8a34v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆளும்கட்சியான தி.மு.க., தற்போதுள்ள கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுகள் தொடரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., என்ன செய்ய உள்ளது என்பதும் தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி உருவாகும் என்று இந்த நிமிடம் வரை பேச்சுகள் விடாமல் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., இன்று (மார்ச் 25) திடீரென டில்லிக்கு பயணமாகி உள்ளார். தலைநகர் டில்லியில் அ.தி.மு.க., கட்சி அலுவலகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள இந்த கட்டடத்தை இ.பி.எஸ்., சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தான் திறந்து வைத்தார். அந்த அலுவலகத்தை பார்வையிடுவது, கூடவே, டில்லியில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவது, தேர்தல் ஆணையத்தில் இருக்கும் வழக்கு விவகாரம் தொடர்பாக, மூத்த வழக்கறிஞர்களுடன் விவாதிப்பது ஆகியவை அவரது பயணத்திட்டத்தின் நோக்கம் என்று கட்சியினர் கூறுகின்றனர்.மும்மொழிக் கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் ஆகியவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி டில்லியில் பா.ஜ., மூத்த தலைவர்களிடம் விளக்கவும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை புகார் கூறவும் இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இ.பி.எஸ். டில்லி சென்றுள்ள அதே தருணத்தில் இன்று (மார்ச் 25) மாலை எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் டில்லி செல்ல உள்ளதாக தெரிகிறது. இவ்விரண்டு விஷயங்களை ஒருங்கே வைத்து பார்க்கும் அரசியல் நோக்கர்கள், இது நிச்சயம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கான முதல்கட்ட நகர்வே என்கின்றனர்.முதல்வரை முந்திக்கொள்ள முயற்சியா?சட்டசபையில் நேற்று 24ம் தேதி பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக்குழு தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கி, அவரிடம் பேச இருப்பதாக' அறிவித்தார்.அவர் சென்று நேரில் பார்ப்பதற்கு முன், நாம் பா.ஜ., தலைவர்களை சந்தித்துப் பேசி நிலைமையின் தீவிரத்தை விளக்கி, நல்ல அறிவிப்பு வெளியிடச் செய்யும் முயற்சியாக, இ.பி.எஸ்., சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது எழுந்துள்ள யூகங்கள் தொடர்பாக இ.பி.எஸ்., கூறியதாவது: டில்லியில் கட்டப்பட்ட அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

kumar c
மார் 26, 2025 10:53

எனக்கு இந்த செய்தி பெரிய ஆர்வத்தை தூண்ட வில்லை .24 + 19 = 43 எப்போதும் 52 விட அதிகம் இல்லை. ஆனா இங்க வருகிற கருத்து கதறல்கள் தமிழ்நாடு கள நிஜ நிலவரத்தை கூறுகிறது. 1996 வருட தேர்தலை நினைவு கூறுகிறது .அன்னைக்கு அம்மா வேண்டாம் . இன்று அப்பாதாத்தா வேண்டாம் . ஹலோ உ.பி ஆட்சி மாறினாலும் இந்த 200 ரூபா கிடைக்கும் கவலை படாதே சகோதரா.விடியா அரசு 20 வருசத்துக்கு தேவையான காசு வச்சிருப்பாங்க


Mahendran Puru
மார் 26, 2025 08:37

பழனிசாமி கவனமாக இருக்க வேண்டிய நேரம். ஜனநாயக வாதி எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. அட்வாணி, பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் என்று பலரை பல மணி நேரம் கேட் வாசலில் காக்க வைத்த ஜெ வளர்த்த கட்சியை காவு கொடுத்து தமிழனத்திற்கே துரோகம் செய்துவிடக் கூடாது.


PSarathy
மார் 26, 2025 06:41

ஈ பி எஸ் சொல்லும் காரணம் "எனக்கு அங்கு ஒரு பீடா கடைக்காரனை தெரியும். அவனை பார்க்க வந்தேன் " என்று சொல்வதுபோல் உள்ளது.


K.Ramakrishnan
மார் 25, 2025 22:05

டெல்லியில் காற்று வாங்க வந்திருப்பார்.அல்லது இரட்டை இலையை முடக்கி விடாமல் இருக்க பேரம் பேச வந்திருப்பார்.


Apposthalan samlin
மார் 25, 2025 17:37

ஜெயின் பறிப்பு up காரங்க பிடிச்சு ஜெயின் பறித்தவர்களிடம் கொடுத்தாச்சு


raja
மார் 25, 2025 17:35

10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ... அடேங்கப்பா கட்சி கட்டிடம் என்றால் பத்துகோடியில் கட்டிவிடுகிரார்கள். ...ஆனால் இதே 10 கோடியில் அரசு கட்டிடம் என்றால் ஒரு பொது கழிப்பறை தான் கட்டுகிறார்கள் இந்த திருட்டு திராவிடர்கள்....அதிலும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் கட்டிய தடுப்பணை ஒரே வெள்ளத்தில் உடைந்ததை தமிழன் மறந்திருக்க முடியாது....


naga
மார் 25, 2025 16:42

போதைய போட்டுப் பிறகு ஒரு பாஷை பேசுவானுவோ பாருங்க அதுக்கு பேரு டாஸ்மாக் மொழி. இருமொழி தொகுதி சீரமைப்பு இந்த வெங்காயத்தை எல்லாம் அண்ணாமலை உரிச்சு உப்பு கண்டம் போட்டு வச்சு இருக்காரு. எச்.ராஜாவோ இன்னைக்கு ஒன்றல்ல இரண்டு னு பீதியை கிளப்பி விட்டு இருக்காரு. ரெண்டு திராவிட சாக்கடையும் டில்லியில் முகாம். இவிங்க முகத்தை பத்தி தெரியாதா ? என்னவோ மர்மமா இருக்கு மாயமா இருக்கு


V Govindaraji
மார் 25, 2025 16:28

அதிமுக ஆபீஸ் பார்க்க வந்தேன்னு எடப்பாடியார் கதை விடக்கூடாது. அதை யாரும் நம்ப மாட்டார்கள். சட்டசபை விடுமுறை நாளான சனி, ஞாயிறு போக வேண்டியது தானே பா.ஜ., தலைவரகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவே, அவர்களின் அழைப்பின் பேரில்.அவசர, அவசரமாக போயிருக்கிறார். இதுதான், உண்மை. கத்தரிக்காய் முற்றினால் கடை்தெருவுக்கு வந்துதானே ஆகணும் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்... இதெல்லாம் எங்களுக்கு தெரியும் எடப்பாடியாரே -


Siva Balan
மார் 25, 2025 16:17

தமிழகத்தில் சட்டசபை நடக்கும்போதே கொலை, கொள்ளை, கற்பழிப்பு, செயின்பறிப்புன்னு கொள்ளைகாரர்களின் அட்டூழியம் உள்ளேயும் வெளியேயும் ரொம்ப அதிகமாகி விட்டதால் ரானுவத்தை அழைக்க போயிருப்பாரோ....


TRE
மார் 25, 2025 16:10

அமித்ஷா காலில் விழ வந்திருக்கார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை