உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ்க்கு 10 நாள் கெடு; மனம் திறந்தார் செங்கோட்டையன்

அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ்க்கு 10 நாள் கெடு; மனம் திறந்தார் செங்கோட்டையன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால், நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கட்சியில் அதிருப்தியில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,யும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், இன்று (செப் 05) மனம் திறந்து பேச இருப்பதாக அறிவித்து இருந்தார். அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் போக வேண்டிய பேட்டி இது. ரொம்ப முக்கியமானது. முக்கியமான நேரம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். அதிமுகவை 1972ம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=di7vk5gg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியின் கிளைச் செயலாளராக பணியாற்றினேன். 1975ல் கோவையில் நடந்த பொதுக்குழுவில் பொருளாளர் ஆக நியமித்தார்கள். 1977ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். 1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிடுமாறு எம்ஜிஆர் அறிவுறுத்தினார். எம்ஜிஆருக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் திறமை ஜெயலலிதாவுக்கே உண்டு என்று தலைவர்களுடன் நானும் சென்று வேண்டுகோள் விடுத்தேன்.

2 வாய்ப்புகள்

தமிழகத்தில் ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆளுமை மிக்க முதல்வராக விளங்கினர். ஜெயலலிதா மறைவுக்கு பல்வேறு சோதனைகள் வரும் அன்றைக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை பேணி காப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போது கூட இந்த இயக்கம் உடை ந்துவிடக்கூடாது என்பதற்காக எனது பணிகளை மேற்கொண்டேன். இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பது தொண்டர்களின் நோக்கம் தான். அதிமுகவுக்காக பல தியாகங்களை செய்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசி உடன் இந்த இயக்கம், மீண்டும் தமிழகத்தில் அமைய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். 2016ம் ஆண்டிற்கு பிறகு தேர்தல் களம் எப்படி போராட்ட களமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் தேர்தல் களத்தில் நாம் வெற்றி பெற முடியும். பாஜவின் மூத்த தலைவர்கள் அழைப்பின் பேரில் தான் டில்லி சென்றேன். அதிமுகவை ஒன்றிணைக்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் 6 பேருடன் சென்று இ.பி.எஸ்ஸை சந்தித்தேன். அவர் எங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 2024ல் பா.ஜ., உடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் நாம் 30 இடங்களை வென்றிருப்போம்.

10 நாள்கள் கெடு

6 முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் அதனை ஏற்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் சேர்ந்தால் தான் வெற்றி நிச்சயம். அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கு நான் காலக்கெடு வைத்திருக்கிறேன். பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம். வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: நீங்கள் அடுத்த பொதுச்செயலாளராக முயற்சி செய்வீர்களா?செங்கோட்டையன் பதில்: என்னை பொறுத்தவரை இந்த இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்கம் உயிரோட்டம் உள்ள இயக்கமாக, ஜெயலலிதா 100 ஆண்டுகள் வாழும் குறிப்பிட்டது போல் அதற்காக எனது பணிகளை இன்று தொடங்கி இருக்கிறேன். நிருபர்: உங்களது கோரிக்கையை இபிஎஸ் நிராகரித்து விட்டால் உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்?செங்கோட்டையன் பதில்: என்னை பொறுத்தவரைக்கும் இரண்டு விஷயங்களை சொன்னேன். விரைந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசை. அப்படி இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்த மனநிலையில் இருப்பவர்களை எல்லோரும் சேர்ந்து ஒன்றிணைக்க முயற்சி செய்வோம். இது தான் எங்களுடைய நோக்கம். நான் கடைசியில் சொன்னேன். இந்த கோரிக்கையை விரைந்து செயல்படுத்தவில்லை என்றால் இவருடைய (இபிஎஸ்) சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.நிருபர்: பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். எதற்காக அவர் மறுக்கிறார். அவரது தலைமைக்கு பாதிப்பு வரும் என்று நினைக்கிறாரா? செங்கோட்டையன் பதில்: என்னை பொறுத்தவரைக்கும் அவரது மனநிலை பற்றி எனக்கு தெரியாது. என்னுடைய மனநிலை தொண்டர்களின் மனநிலை. பொதுமக்கள் இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் மனநிலையை தான் நான் இங்கு வெளிப்படுத்தினேன்.

சஸ்பென்ஸ்

சசிகலா உட்பட ஒத்தக்கருத்துடையவர்களை சந்தித்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அது சஸ்பென்ஸ் என செங்கோட்டையன் பதில் அளித்தார்.நிருபர்: ஓபிஎஸ் பிரிந்து சென்ற போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் எல்லாம் சந்தித்து பேசினீர்கள். அதனை மீறி ஓபிஎஸ் வெளியேறினார். கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது ஓபிஎஸ் சேர்த்து கொள்ள சொன்னால் எப்படி சேர்க்க முடியும் என்று தான் இபிஎஸ் மனநிலை இருக்கிறதே?செங்கோட்டையன் பதில்: அன்று தலைமை மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த SDS-ஐயே மன்னித்தார் எம்.ஜி.ஆர். கவர்னரிடம் ஊழல் குற்றச்சாட்டு கூறியவர்களையே எம்ஜிஆர் இணைந்து பணியாற்றுங்கள் என்று சொன்னார். இவர்கள் அப்படி எல்லாம் சொல்லவில்லையே.

வரவேற்பு

முன்னதாக, ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் கட்சி அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதிமுகவின் ரத்தம் இந்த நிலையில், செங்கோட்டையன் பேச்சைக் குறிப்பிட்டு, 'ஒன்று படுவோம். வென்று காட்டுவோம்', என்று சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில்; செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவினால் மட்டும் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும், என்று குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் செல்வோம்

தஞ்சாவூரில், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஓ.பி.எஸ்., ஆதரவாளருமான வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஒன்றாக இருக்க வேண்டும் என்ற மனதுடன், செங்கோட்டையன் கூறியதை நான் வரவேற்கிறேன். செங்கோட்டையன் எங்களுடன் தொடர்பு இல்லை. அவர் பழனிசாமி தலையிலான அ.தி.மு.க.,வில் உள்ளார். அவருக்கு பலரின் ஆதரவு உள்ளது. 10 நாள் கெடு கொடுத்துள்ளார். அந்த கெடு முடிந்தவுடன் நான் கருத்துக்கூறுகிறேன். இருப்பினும், செங்கோட்டையன் ஏற்படுத்தும் ஒன்றிணைப்புக் குழுவுக்கு அழைத்தால், நாங்களும் செல்வோம். அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புகின்றனர். அ.தி.மு.க., மீது தமிழக மக்கள் பாசம் வைத்துள்ளனர். அ.தி.மு.க., இணைய தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்டோர் அ.தி.மு.க., இணைய வேண்டும் என்ற ஒத்தக்கருத்தில் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

தெரியாது

தர்மபுரி மாவட்ட செயலாளரும், பாலக்கோடு எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் கூறியதாவது: செங்கோட்டையன் என்ன பேட்டி கொடுத்தார் எனத்தெரியாது, நான் பார்க்கவில்லை. கட்சியின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையை சந்திப்பது இயல்பு. என்னை பொருத்தவரை கட்சி தலைமைக்கு அறிவுரையோ, யோசனையோ கூறும் அளவில் நான் இல்லை. இபிஎஸ் என்ன சொல்கிறாரோ அதன் வழியில் நடப்பேன். செங்கோட்டையன் கூறியுள்ளது அவர் கருத்து.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

Raja
செப் 06, 2025 12:26

கடந்த சில மாதங்களாக "அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும்" என்றல்லாம் சிலர் கூறி வருகின்றனர். முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. அதிமுக பிளவுபடவில்லை. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவ்வளவுதான். இவர்களை நீக்கியதால்தான் தோல்வியடைகிறது என்ற கூற்று பொய்யானது. பன்னீர்செல்வம் உடனிருந்த போதுதான் சென்ற சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்றது. பன்னீர்செல்வம் இல்லாததால் முக்குலத்தோர் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்காது என்று சொல்வது ஒரு மாயை. அப்படியென்றால் 2021 சட்டசபை தேர்தலில் தென்தமிழகத்தில் அதிமுக ஓட்டு குறைந்தது ஏன்? பன்னீர்செல்வமே அவரது சொந்த தொகுதியில் மிகவும் சிரமப்பட்டுதான் வென்றார். அந்த தேர்தலில் உள்ளடி வேலை செய்து தென்தமிழகத்தில் அதிமுக தோற்க காரணமாக இருந்ததே இந்த பன்னீர்செல்வம்தான். தனது சமுதாய மக்களிடமும், சொந்த தொகுதியிலும் செல்வாக்கை இழந்த ஒரு அரசியல்வாதி பன்னீர்செல்வம். இவர் வந்து மாபெரும் இயக்கமான அதிமுகவை வெற்றிபெற வைப்பார் என்பது நகைப்புக்குரியது.


Parthasarathy Badrinarayanan
செப் 06, 2025 12:23

அன்வர் ராஜா , மைத்ரேயன் போல விலை போகத் தயாராக இருப்பவர். வெட்கக் கேடு.


Parthasarathy Badrinarayanan
செப் 06, 2025 12:21

டம்மி பீஸு. கடந்த சில ஆண்டுகளாகத் தூங்கினார்?


Natchimuthu Chithiraisamy
செப் 05, 2025 18:52

இணைத்து செயல் படுங்கள் என்கிற கருத்தை டெல்லி பிஜேபி சொல்லி அதே பாட்டை அனைத்து பிஜேபி ஆட்களும் பாடி. அண்ணாமலை தலைவர் பதவி போனதுதான் மிச்சம். அதிமுக பிரச்சனையை அண்ணாமலை தெளிவாக தலைமையிடம் சொல்லி அனைத்தையும் சரி செய்து இருக்கலாம். அதை விட்டு விட்டு அண்ணாமலை தலைமை செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டது தவறு.சசிகலா ஆசையை நிறைவேற்ற சசிகலா வேலை ஆட்கள் முயற்சி பண்ணுவது வீண் வேலை. தினகரன் பண்ணீர் சசிகலா செங்கோட்டையன் திமுகவுக்கு பாடுபடுகிறார்கள். எடப்பாடியார் என்ன நடந்தாலும் பணியமாட்டார் தோல்வியை பற்றி கவலையும் படமாட்டார்.அண்ணாமலை இதை புரிந்து கொண்டு பிஜேபி க்கு மட்டும் பாடுபடுவது எதிர்காலத்தில் மிக பெரிய தலைமை பணிக்கு செல்ல வாய்ப்பு அதிகம்.சின்ன சின்ன அரசியலை அண்ணாமலை செய்யக்கூடாது


V pravin
செப் 05, 2025 17:14

செங்கோ டா நீ ஒரு சகுனி ஓபிஎஸ் நம்பர் 2 உனக்கு திராணி இருந்தால் ஒரு கட்சி ஆரம்பி அவர்கள் எல்லாரையும் சேர்த்துக் கொள்


V pravin
செப் 05, 2025 17:08

செங்கோட்டையன் ஒரு எட்டப்பன் நீ வேணும்னா கட்சியை விட்டு வெளியே போடா


Easwar Kamal
செப் 05, 2025 16:32

செவிடன் எடப்பாடி காதுல இது விழாது. செகோட்டையான சொல்வது போல பிரிந்தவர்கள் சேர்த்தால்தான் வெற்றி கிட்டும். இப்போது dmk பெரிய அளவில் வளர்ந்து உள்ளனர். இவர்களை தோற்கடிபது அவ்வளவு எளிது கிடையாது. எடபடியான் நினைக்கிறாப்ல அமித் தேர்தல் நேரத்தில் தில்லாங்கடி செயது ஜெயிக்க வைப்பார் என்று. அமித்துக்கு ஸ்டாலின் /எடப்பாடி ரெண்டுபேரும் ஒன்று தன. பிஜேபி/அதிமுக சரி சமமாக போட்டி இட்டால் என்றல் உதவி கிட்டும். இல்லாவிட்டால் அமித் தன வேலை பார்க்க போய் விடுவார். எடப்பாடிகு ஆட்சி விட கட்சி தன முதன்மையாக படுகிறது. மற்றவர்கள் எக்கேடும் கெட்டு போனாலும் பரவ இல்லை. இதை இந்த எடப்பாடிகளின் எடுபிடிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.


V K
செப் 05, 2025 15:44

இப்படியே அந்த மணி இந்த மணி கிளப்பிட்டாங்கன்னா பழனிக்கு அபயா மணி தான்


Palanisamy Sekar
செப் 05, 2025 15:21

இதைத்தான் ஆரம்பம் முதலே சொல்லிவருகின்றேன்.ஒன்றுபட்ட அதிமுக இருந்திருந்தால் இந்நேரம் திமுக மண்ணுக்குள் புதைந்து போயிருக்கும். அம்மா அவர்கள் சொன்னது போல எனக்கு பின்னரும் இந்த இயக்கம் நூறாண்டுகள் இருக்கும் என்பதை மறந்து தன்னை பெரிய செல்வாக்குள்ள எம் ஜி யார் என்றும் அம்மா ஜெ போல தனக்கும் செல்வாக்கு உண்டு என்று நினைத்ததால் வந்த வினைதான் எல்லோரையும் துரத்தியடித்தது. திமுகவை பாருங்கள் ஒவ்வோர் கட்சிக்குக்ம் பல கோடிகளை வாரிக்கொடுத்து தன்னோடு வைத்துக்கொண்டதுமட்டுமல்லாது திமுகவுக்காக ஊதுகுழலாக இருக்க வைத்துள்ள சாமர்த்தியம் தான் அரசியலுக்கு தேவையே தவிர எல்லோரையும் விரட்டிவிட்டு தான் தான் எல்லாமே என்று சொல்வதைத்தான் சகிக்க முடியவில்லை. கூவத்தூர் புகழ் அரசியல்வாதிக்கு என்று ஓட்டுவங்கியே இல்லை என்றாலும் திமுக அந்த நபரையும் கூட வைத்துக்கொண்டு எடப்பாடியை திட்டுவதற்கு பயன்படுத்திக்கொள்வதுதான் அரசியல் சாணக்கியத்துவம் என்பது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறந்துவிட்டு கட்சியை அதலபாதாளத்துக்கு கொண்டு செல்வது முறையா என்றுதான் செங்கோட்டையனின் கேள்வியே. இதில் கெடு வைத்துவிட்டார் என்று யோசிப்பதை விடுத்து நல்ல யோசனை என்று சிந்திக்கவேண்டுமே தவிர மீண்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய்விட கூடாது. பன்னீர்செல்வம் அவர்கள் மூன்று முறை முதல்வராக இருந்தவரை எந்த நிபந்தனையின்றி சேர இருந்தபோதும் கூட ஓதுகிய செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரச்சாரதிக்கு தான் மட்டுமே போதும் என்று எண்ணிவிட கூடாது. பிரிந்தவர்கள் ஒன்றுபட எடப்பாடியார் சிந்திக்க வேண்டும். குற்றமும் குறையை சொல்லி மீண்டும் ஒதுக்குவது முறையாகாது என்பதுதான் அம்மாவின் உண்மையான தொண்டர்களின் ஆசை. அப்போது பாராட்டுங்கள் பாஜக அதிமுக கூட்டணி நிரந்தரமான ஆட்சியில் இருக்கும். அதனை தடுக்க ஆளும்தரப்பு பல்வேறு வகையில் பலரை பேசவைத்து ஒன்றுசேரவிடாமல் தடுக்க முயற்சிக்கும். செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.


Kadaparai Mani
செப் 05, 2025 14:58

What Anwar raja and maithreyan secured only one time retainer fee. But sengottian payment CTC concept. Only intelligent people can understand.


முக்கிய வீடியோ