உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்! சட்ட நடவடிக்கை கோரும் இ.பி.எஸ்.

3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்! சட்ட நடவடிக்கை கோரும் இ.பி.எஸ்.

சென்னை: சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இ,பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை; சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன. சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் தி.மு.க.,அரசு உணர வேண்டும். 'SIR' போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழகத்தில் பல 'SIR'கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 17:23

மூர்க்கன்ஸ் தொடர்பு இருக்குது சாரே ..... உங்களுக்கு சிறுபான்மையினர் ஒட்டு வேணாவா ?


Shivam
ஜன 27, 2025 16:03

சார் சொல்லீட்டாரு, உடனே நடவடிக்கை, உடனே வெள்ளை அறிக்கை, உடனே சிபிஐ விசாரணை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை