உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூங்கா திறந்த வெறும் 5 நாளில் இந்த நிலையா? மக்களின் உயிரோடு விளையாடாதீங்க: எச்சரிக்கும் இ.பி.எஸ்.,

பூங்கா திறந்த வெறும் 5 நாளில் இந்த நிலையா? மக்களின் உயிரோடு விளையாடாதீங்க: எச்சரிக்கும் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மக்களின் உயிரோடு, கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க., அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர், தனது தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க., அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது தி.மு.க., அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது தி.மு.க., அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தி.மு.க., முதல்வரை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kasimani Baskaran
அக் 13, 2024 06:33

பங்காளிகளை பக்குவமாக விமர்சிப்பது போல பாராட்டுகிறார்.


மோகனசுந்தரம்
அக் 13, 2024 04:38

இந்த துரோகி பழனியாண்டியின் அறிக்கை நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு என்பது போல் உள்ளது


கிஜன்
அக் 13, 2024 02:49

3000 கோடி படேல் சிலையை பார்ப்பதற்கே 575 ரூபாய் .... 3 வயது குழந்தைகளுக்கு கூட 375 ரூபாய் .... அதையும் கேளுங்க .....ஈபீஸ் .... பிளஸ் ...பேல் பூரி ...பாணி பூரி ...மற்றும் GST ..இதர செலவுகள் தனி ...


kumar
அக் 13, 2024 05:54

ஐயா கொத்தடிமையே படேல் சிலை அரசால் நிறுவப்பட்டதல்ல வரிப்பணத்தால் நிறுவப்பட்டதும் , பராமரிக்கப்படுவதும் அல்ல . சரிதான் முட்டு கொடுப்பது என்று குனிந்து விட்டீர்கள் . உண்மையை பார்த்தால் முடியுமா . நடக்கட்டும் .


Chand
அக் 13, 2024 06:22

உங்களை திருத்த முடியாது . நல்ல சோம்பு தூக்கு


Ram
அக் 12, 2024 22:31

இது அரசாங்கமா இல்லை கொள்ளைக்கூட்டமா


xyzabc
அக் 13, 2024 03:39

அரசாங்கத்தில் இருக்கும் கொல்ளை கூட்டம்


Kasimani Baskaran
அக் 13, 2024 06:32

கொள்ளைக்கூட்டத்திடம் சிக்கிய அரசாங்கம்.


சாண்டில்யன்
அக் 12, 2024 22:26

உங்க நிர்வாகத்தில் திறப்பு விழாவுக்கு முன்னரே மேம்பாலங்கள் இடிந்து விழுந்ததே டிவி யில் பார்க்கலையா


kumar
அக் 13, 2024 03:57

என்ன கருத்தாயா உங்களுது ? அவங்க ஆட்சியிலே மோசமாக இருந்ததுனு அவியல் மன்னிக்க , அரசியல் பண்ணித்தானே விடியல் ஆட்சிக்கு வந்தது ? நாங்க ஆட்சிக்கு வந்தது சுருட்ட தான் ன்னு நீ சொல்லி இருந்தா நேர்மையாக இருக்கும் . அனால் 200 ரூபா கொத்தடிமைக்கும் , அவனோட எஜமானர்களுக்கும் நேர்மைன்னா தெரியாதுங்கற விஷயம் மக்களுக்கு தெரியுமே .


Devanand Louis
அக் 12, 2024 22:26

இந்த பூங்காவின் பெயர் கருணாநிதி ஆகையால் பெயருக்குஏற்ப கொள்ளைகள் அரங்கேறுகிறது


கிஜன்
அக் 12, 2024 21:57

650 ரூபாய் அரசுக்கு தானே வருகிறது .... ? பின்ன அவரு உங்க தந்தை பேரிலேயா பூங்கா திறப்பார் ?


Sudarsan Ragavendran
அக் 12, 2024 22:18

அறிவிலியே அவங்க அப்பா பேருல தொறக்க எதுக்கு அரசாங்க பணம்


sridhar
அக் 12, 2024 22:48

நீங்க ஒரு லட்ச ருபாய் அரசாங்கத்துக்கு சும்மா கொடுங்களேன்


Anantharaman Srinivasan
அக் 12, 2024 23:06

எல்லாத்துக்கும் கருணாநிதி பெயரா..??


kumar
அக் 13, 2024 04:03

650 ரூபாய் அரசுக்கு போகிறது ன்னு உங்களுக்கு தெரியுமா ? பச்சப்புள்ள தனமா இப்படி முட்டு கொடுக்கறீங்க ? 72ல் கார்ப்பரேஷன் மஸ்டர் ரோல் ஊழலில் தொடங்கி ஒவ்வொரு திட்டமும் கட்சி குடும்பத்துக்கு துட்டு சேர்க்கும் திட்டம் என்று எல்லோருக்கும் தெரியும். வரிப்பணத்தில் காட்டும் பூங்காவிற்கு விஞ்ஞான ஊழல் மன்னன் பெயர் வேண்டுமா ?


ஆரூர் ரங்
அக் 12, 2024 21:57

கருணாநிதி பெயரிலேயே நிதி இருக்கிறது. வசூலிப்பது எதிர்பார்த்ததுதானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை