உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பு மனு தாக்கல்

நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பு மனு தாக்கல்

சென்னை : இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. பிப்ரவரி, 5ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தன.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட, திருமகன் ஈ.வெ.ரா., வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவு காரணமாக, 2023 ஜனவரி, 4ல் இறந்தார். அதைத் தொடர்ந்து, அந்த ஆண்டு பிப்., 27ல் இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, திருமகனின் தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான இளங்கோவன் வெற்றி பெற்றார்.கடந்த ஆண்டு டிசம்பர், 14ல், அவரும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். டில்லி சட்டசபைக்கு நேற்று பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதோடு சேர்த்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் நாளை மறுநாள், வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளது. வரும் 17ல் மனு தாக்கல் செய்ய கடைசி நாள். மறுநாள் 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற, 20ம் தேதி கடைசி நாள். அடுத்த மாதம், 5ம் தேதி ஓட்டுப்பதிவும், 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இரண்டாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறையும் போட்டியிட உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., 2023 பிப்., 27ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அதில், மறைந்த இளங்கோவன், ஒரு லட்சத்து 10,556 ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க., 49,981 ஓட்டுகளை மட்டுமே பெற்றது. அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. தற்போது, இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக உள்ளதால், இரண்டில் எது களமிறங்கும்; எது புறக்கணிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பதை டில்லி மேலிடத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும்.- செல்வப்பெருந்தகை,தமிழக காங்., தலைவர்

11ல் அ.தி.மு.க., முடிவு

இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க, வரும் 11ல், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் நடக்க உள்ளது. அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியை போல் இத்தேர்தலையும் அ.தி.மு.க., புறக்கணிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Krishnamurthy Venkatesan
ஜன 08, 2025 20:25

எதிர்க்கட்சிகள் ஈகோவைத் தவிர்த்து ஒரு பொது வேட்பாளரை NTK or AIADMK நிறுத்தி அவரின் வெற்றிக்கு பாடுபட்டால் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் விழும். பொதுவேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 08, 2025 15:46

திமுக கூட்டணி யில் காங்கிரஸ் க்கு தரப்பட்ட தொகுதி என்பதால் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புகள் அதிகம். எதிர்த்து யாரும் நிற்க மாட்டார்கள். பைத்தியக்கார கோமாளி சீமான், ஈரோடு பக்கமே இதுவரை யாரும் கேள்விப்படாத ஒரு பலியாட்டை நிறுத்தி, காமெடி பண்ணுவார். அரூர் ரங் தாத்தா சொன்ன மாதிரி ஒரு பாஜக பலியாடு கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்படும். திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார்.


ஆரூர் ரங்
ஜன 08, 2025 15:00

அடுத்த பலியாடு யார்? காங்கிரசில் நிறைய மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜன 08, 2025 14:58

யாராவது ஐசியு வில் இருக்கும் ஆளை வெற்றி வேட்பாளராக நிறுத்துங்கப்பா. வெற்றி நிச்சயம். இன்னொரு 10000 கசக்குமா என்ன?.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 08, 2025 15:42

தாத்தா நீங்கல்லாம் படிச்சவங்க தானே?? இவ்வளவு அசிங்கமா அநாகரிகமா எழுதறீங்களே, நல்லாவா இருக்கு?? நாளைக்கு உங்களுக்கும் ஐ சி யு நிலைமை வரலாமல்லவா?? தமிழ் நாட்டில் வெறுப்பு அரசியல் செய்வது உங்களைப் போன்ற பாஜகவினர் மட்டும் தான்.


Mohan D
ஜன 08, 2025 12:55

ஈரோடு கிழக்கு தொகுதி ரொம்ப ராசியான தொகுதி போல ..பகுத்தறிவு dmk கூட்டம் அவுனுக போட்டிட மாட்டாங்க இந்நேரம் ஜோதிடம் பாத்து சரிபட்டு வராது சொல்லிட்டு சத்தம் இல்லாம காங்கிரெஸ் கு குடுத்து கூட்டணி தர்மத்தை நிலைநிறுத்திட்டோம்னு தம்பட்டம் மாதிரி இருக்கும் அப்டியே ஒருத்தன் தலை உருளுண மாதிரியும் ஆச்சு ,,ஒரே கல்லுல ரெண்டு மாங்கா .


RAVINDRAN.G
ஜன 08, 2025 10:14

எவன் ஜெயிச்சாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை


N.Purushothaman
ஜன 08, 2025 08:45

திருட்டு திராவிட கட்சி இந்த முறையும் அந்த தொகுதிக்கு முன்னூறு கோடி செலவு செய்யுமா ?


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:46

தீம்க்காங்கிரஸ் ஜெயிக்க ஏதுவாக ஆத்தா தீமக்க்கா போட்டியிடாது என்றுதான் எதிர்பார்க்கிறேன்


Velan Iyengaar
ஜன 08, 2025 08:22

போட்டி பீட்டா சின்னத்தை முடக்க கேடுகெட்டவனுங்க ஏற்பாடு செய்து வெச்சிருக்கானுங்களே ரைடு ... தேர்தல் கமிஷனில் கேசு ..எல்லாம் தயார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை