மேலும் செய்திகள்
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
18 minutes ago
சென்னை:தமிழக அரசு, உப்பளத் தொழிலாளர் களுக்கு, தனி நல வாரியம் அமைக்க அனுமதி அளித்து, உத்தரவிட்டுள்ளது.இந்தியாவின் உப்பு தேவையை பூர்த்தி செய்வதில், குஜராத் மாநிலத்துக்கு அடுத்த இடத்தில், தமிழகம் உள்ளது. தமிழகத்தில், துாத்துக்குடி மாவட்டம், உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உப்பளங்களில் பணிபுரிந்துவருகின்றனர்.இவர்கள் தங்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.அதை ஏற்ற அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்களான, உப்பளத் தொழிலாளர்களுக்காக, தனி நல வாரியம் உருவாக்க, அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
18 minutes ago