உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குத்தகை நிலத்தில் விவசாயம் செய்தாலும் இனி கடன் உண்டு

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்தாலும் இனி கடன் உண்டு

தேனி : குத்தகை நிலத்தில் விவசாயம் செய்வோருக்கும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது.விவசாய கூட்டுறவு சங்கங்களில், உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே, இதுவரை பயிர்க்கடன் பெற முடிந்தது. அதே போல், சொந்த விவசாய நிலம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. உணவு உற்பத்தியை பெருக்கவும், விவசாயத்தை வளப்படுத்தவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்குவதில், உள்ள இடர்பாடுகளை களையவும், கடன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, உறுப்பினர்கள் மட்டுமின்றி, புதிய உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கடன் வழங்கவும், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கவும், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்வோரும் கடன் பெறலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை