உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநிலத்துக்கு மாநிலம் மனைவிகள் ராஜ்ஜியம் தான்!

மாநிலத்துக்கு மாநிலம் மனைவிகள் ராஜ்ஜியம் தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'இது என்ன புதுவிதமான அரசியலாக இருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும் சொல்லி வைத்தது போல், ஒரே மாதிரியாக செயல்படுகின்றனரே...' என, ஆச்சரியப்படுகின்றனர், அரசியல் விமர்சகர்கள்.டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருந்தபோது, அவரது மனைவி சுனிதா, கட்சி வேலைகளைமுன்னின்று செய்தார். எதிர்க்கட்சி கூட்டணிசார்பில் டில்லி, ராஞ்சியில் நடந்த கூட்டங்களிலும் பங்கேற்றார். வரும் ஜனவரியில் நடக்கவுள்ள டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் சுனிதா களம் இறங்கினாலும் ஆச்சரியமில்லை.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, ஏற்கனவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்.எல்.ஏ.,வாகி விட்டார். சமீபத்தில்நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், இவரது பிரசாரம் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டது. அடுத்ததாக, ஹிமாச்சல பிரதேச முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான சுக்விந்தர் சுகுவும்,தன் மனைவி கம்லேஷ் தாக்குரை, இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்து, எம்.எல்.ஏ.,வாக்கி அழகு பார்த்துள்ளார்.இதைப் பார்க்கும் அரசியல் விமர்சகர்கள்,'இப்போதுள்ள அரசியல்வாதிகள், கட்சி நிர்வாகிகளை விட, மனைவி மீதுதான் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்; இனி, மனைவிகள் ராஜ்ஜியம் தான்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Narayanan
டிச 12, 2024 14:26

அதற்குத்தான் சகோதரியை அழைத்துவந்துவிட்டாரே ராகுல்


Anantharaman Srinivasan
டிச 12, 2024 13:25

மாட்டு தீவன வழக்கில் லல்லுபிரசாத் சிறை சென்றபோது கைநாட்டு கூட வைக்கத்தெரியாத தன் மனைவியை முதலமைச்சராக்கியதை சொல்ல மறந்துட்டீங்க...


Narayanan
டிச 12, 2024 13:24

ரப்ரிதேவி லல்லு பிரசாத் மனைவி. கை நாட்டு முதல்வர் இருந்தாரே


MADHAVAN
டிச 12, 2024 11:21

இது என்ன புதுசா ? ஜானகி எப்படி முதல்வர் ஆனார் அப்புறம் ஜெயலலிதா எப்படி ஆனார்


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 11:47

எம்ஜிஆர் அப்படி ஆக்கிவைத்தாரா??? இங்கே பேசுபொருள் அதுதான் .. ஊழலின் நாயகன் மனைவிக்கு அல்சைமர் என்று ஒரு குண்டை போட்டார் நினைவிருக்கிறதா ????


Anantharaman Srinivasan
டிச 12, 2024 13:28

ஜானகியால் தாக்குபிடிக்க முடியலையே.. ஜெ.. மனைவி/வாரிசு அடிப்படையில் வரலே..


முருகன்
டிச 12, 2024 10:29

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் டில்லி முதல்வர்களை நடத்திய விதம் உலகம் அறியும்


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 10:26

மனைவிகளை பின்னணியில் இருந்து இயக்குவாங்க.. மாட்டிக்கிட்டா எங்கூட்டு அம்மாவுக்கு அல்சைமர் ன்னு சொல்லி எசுகேப்பு ஆயிரலாம்.. எல்லா தில்லுமுல்லு வேலைக்கும் எங்க கட்டுதான் முன்னுதாரணம் .....


Siran Jeevi
டிச 12, 2024 10:21

இதை எல்லாம் படிக்கும் போது காங்கிரஸ் தலைவர் பிரம்மச்சாரியான ராகுல்காந்தியை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது அவருக்கும் கல்யாணம் ஆகியிருந்தால் இதே போல அவரும் தன் மனைவியை அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம். நினைத்தால்


Oru Indiyan
டிச 12, 2024 13:54

வந்துட்டாலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை