உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் எம்.பி.,க்கு வாரிய தலைவர் பதவி

முன்னாள் எம்.பி.,க்கு வாரிய தலைவர் பதவி

சென்னை:சர்ச்சுகளில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவராக, முன்னாள் எம்.பி., விஜிலா சத்தியானந்த் நியமிக்கப் பட்டுள்ளார்.இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அ.தி.மு.க., வில் மகளிர் அணி செயலராக இருந்தார். திருநெல்வேலி மேயர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார்; 2021ல், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார்.லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் சர்ச்சுகளில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ