உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

தேனி : நில அபகரிப்பு வழக்கில் தேனியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த சின்னமணியின் மனைவி மலர்விழி(45). இவர் தேனி பை-பாஸ் ரோட்டில் கடந்த 2004 ல் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்துள்ளார். இவரது நிலம் அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர் பாலகுருசாமி(66)யும் நிலம் வாங்கினார். அவர் மலர்விழியின் நிலத்தையும் தன்னுடைய நிலத்துடன் சேர்த்து சீர்படுத்தி, வேலி அமைத்துள்ளார். மலர்விழி கேட்டபோது, நிலத்திற்கான தொகையை வாங்கி கொண்டு செல்லுமாறு, பாலகுருசாமி உட்பட ஐந்து பேர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.தேனி மாவட்ட நில அபகரிப்பு மீட்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், பாலகுருசாமியை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை