மேலும் செய்திகள்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு; முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 1
வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
12 hour(s) ago | 1
4 மாவட்டங்களில் இன்று கனமழை
15 hour(s) ago | 1
சென்னை: தமிழகத்தில், 35,000 ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த கடைகளை, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களும், உணவு துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகமும் நடத்துகின்றன. கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால், ரேஷன் கடைகளில் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், போதிய இடவசதியின்றி பொருட்கள் வாங்க கார்டுதாரர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பொது நிதி, 15வது நிதிக்குழு மானியம் போன்றவற்றில், ரேஷன் கடை பராமரிப்புக்கு செலவு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி செய்து தருமாறு ரேஷன் ஊழியர்கள், கூட்டுறவு துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hour(s) ago | 1
12 hour(s) ago | 1
15 hour(s) ago | 1