உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக எம்பி- எம்எல்ஏ நேருக்கு நேர் மோதல்: ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் அதிர்ச்சி!

திமுக எம்பி- எம்எல்ஏ நேருக்கு நேர் மோதல்: ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: தேனி ஆண்டிப்பட்டியில் அரசு நிகழ்ச்சியில், திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் மேடையிலேயே கடுமையான வார்த்தைகளில் சண்டையிட்டனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. வரவேற்பு பேனரில் எம்எல்ஏ படம் மட்டும் வைத்து விட்டு, எம்பி படம் வைக்கவில்லை. இதனால் திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கோபம் அடைந்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gtwo4v3r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பதிலுக்கு நலத்திட்ட உதவிகளை நான் தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி அட்டையை தங்க தமிழ்ச்செல்வனின் கையில் கொடுக்காமல் எம்எல்ஏ மகாராஜன் பிடுங்கியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. புரோட்டாகால்படி தேனி பார்லிமென்ட் எம்பி படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட கலெக்டரிடம் கேள்வி எழுப்பியதோடு மேடையிலேயே எம்எல்ஏ மகாராஜனை திட்டி தீர்த்தார். தன்னை திட்டுவதாக கூறி தங்க தமிழ்செல்வனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது இருவரும் நான் தான் வழங்குவேன் என மாறி மாறி அடம் பிடித்தனர். இதனால் தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் கடும் வாக்குவாதம் செய்ய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே முடித்து விட்டு, மாவட்ட கலெக்டர் உட்பட அனைவரும் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ரங்ஸ்
ஆக 02, 2025 22:42

பணம், பதவிக்கு எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இங்கிதம் கிடையாது. மேடை நாகரிகம் தெரியாது.


Chandru
ஆக 02, 2025 20:10

How else can you expect these thugs to behave???


அப்பாவி
ஆக 02, 2025 19:17

ரெண்டு கூட்டமா நடத்திக்கிட்டு ஆட்டைய போட்டுக்க வேண்டியதுதானே... எதுக்கு தமிழ்நாட்டின் மானத்த வாங்குறீங்க?


Mani . V
ஆக 02, 2025 18:41

எது ரௌடிகளுக்குள் மோதலா?


எஸ் எஸ்
ஆக 02, 2025 17:38

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காற்றில் பறக்கின்றன....


D.Ambujavalli
ஆக 02, 2025 16:45

இவர்கள் ன்ன, தங்கள் கைக்காசைப்போட்டு பொருள்களைக் கொடுக்கிறார்களா? ‘மக்கள் வரிக்காசை வழங்கும் எண்கள் கையே’ என்று கொடுப்பதில் என்ன prestige வேண்டிக்கிடக்கு?


வண்டு முருகன்
ஆக 02, 2025 16:05

இது என்ன பிரமாதம்? ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருக்கு. தேர்தல் நெருங்கட்டும் பாருங்க.


Anand
ஆக 02, 2025 15:45

கலெக்டருக்கு அப்படி என்ன தான் அவசரமோ? சற்று நேரம் பொறுமையாக இருந்திருந்தால் அவர்கள் இருவரும் கட்டிப்புரண்டு உருளுவதை கண்டு ரசித்திருக்கலாம்.


சிவா
ஆக 02, 2025 16:18

சரியாகச் சொன்னீர்கள்!


Rameshmoorthy
ஆக 02, 2025 15:34

Multi idiots


ஆரூர் ரங்
ஆக 02, 2025 14:28

இரும்புக்கை மாயாவி மவுனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை