குடும்ப தகராறு: குழந்தைகளுடன் தந்தை தற்கொலை
கடலுார்:கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்பத்தகராறு காரணமாகக் கடந்த சில நாட்களுக்கு முன் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனமுடைந்து காணப்பட்ட ராஜா, தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மெசேஜ் அனுப்பினார்.பின்னர், வீட்டில் ஒரே கயிற்றில் 12 வயது மகன், 7 வயது மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி அனுப்பி வைத்தனர். குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.