உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்: இபிஎஸ்

திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: '' திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், என் மீது முதல்வர் குற்றம்சாட்டுகிறார்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.சேலம் விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது:

டிஜிபி நியமனம்

நிரந்தர டிஜிபி நியமனத்தில் திமுக அரசுக்கு தடுமாற்றம் ஏன்? நிரந்தர டிஜிபி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.ஆனால், எனக்கு அருகதை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.எனக்கு அருகதை உள்ளது. உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை.மாநில அரசு தான் டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பான பட்டயலை அனுப்ப வேண்டும். பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழக அரசுக்கு கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதினால் தான் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை.

உண்மை சொல்ல வேண்டும்

இதுதான் உண்மை. ஆனால் சட்டத்துறை அமைச்சர், தவறாக இப்படி பேட்டி கொடுப்பது வெட்கக்கேடான விஷயம். இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு எப்படி உருப்படியாகும். உண்மை செய்திகளை மக்களிடம் சொல்ல வேண்டும். மக்களுக்கு ஏதும் தெரியாது என நினைக்கிறார்.

உண்மை நிலை

நெல் கொள்முதல் விஷயத்தில் திமுக அரசு மெத்தனமாக, அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதால் விவசாயிகள் துன்பப்படுகின்றனர். முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி படுகை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்துள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டு பயிரகளை அறுவடை செய்திருந்தால் நெல் மழையில் நனைத்திருக்காது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி குறைவு உள்ளது. இதுதான்உண்மை நிலை.

எனது தொழில்

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் குறவை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால், அவர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் அரசு திமுக அரசு. விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் சினிமா பார்க்க செல்கிறார் முதல்வர்.விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசு.என்னை பச்சை துண்டுபோட்ட விவசாயி என ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். நான் விவசாயிதான் அனைவருக்கும் தெரியும். எம்எல்ஏ ஆனது முதல் விவசாயம் செய்து வருகிறேன். மறைத்து சொல்லவில்லை. அது தான் எனது தொழில். ஆனால், விவசாயிகளுக்கு துரோகம் செய்த அரசு திமுக அரசு ஆனால், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சி செய்தவர் ஸ்டாலின். அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பதினால் என்னை விமர்சனம் செய்கிறார்.

முதல்வருக்கு தெரியாது

நெல் ஈரப்பதம் 22 சதவீமாக ஆக உயர்த்தம் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த காரணத்தை சொல்லவில்லை. என்ன காரணத்துக்காக நிராகரித்தார்கள் என சொன்னால் தானே பதில் சொல்ல முடியும். 3 வேளாண் சட்டங்கள் என்னவென முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் சொல்லட்டும். நான் சொல்கிறேன். தமிழக விவசாயிகள் எப்படி அச்சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் சொல்ல வேண்டும்.

என்ன பயன்

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டது கிடையாது.கோரிக்கைகளை நீங்கள் தான் போராடிவாங்க வேண்டும். எதிர்க்கட்சி தான் அதை செய்ய வேண்டியுள்ளது.காவிரி பிரச்னையில் அதிமுக எம்பிக்கள் பார்லிமென்ட்டை முடக்கினார்கள். நீட் பிரச்னை பற்றி திமுகவினர் பேசினார்கள். பார்லிமென்டில் பேச முடிந்ததா? பேசினால், நீங்கள் செய்த ஊழல் வெளியே வந்துவிடும் என அச்சம் . பயம். 100க்கு 100 வெற்றி என மார் தட்டக்கூடாது. ஓட்டு போட்ட மக்களுக்க நன்மை செய்யணும். 39 எம்பிக்களை வைத்து இருந்து என்ன பயன். மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படும்போது வாதாடி, போராடி பெறத்தான் உங்களை தேர்வு செய்துள்ளனர்.ஆனால், அதை மறந்து பேசி கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் செய்ய மறந்ததை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதனை பற்றி கவலைப்படவில்லை.

திமுகவினர் முறைகேடு

ஓ.பன்னீர்செல்வம் பிரச்னை முடிந்து போன ஒன்று. அரைத்த மாவையே அரைக்கறீர்கள்.எஸ்ஐஆரில் என்ன பிரச்னை உள்ளது. நீங்கள் நியமித்த கலெக்டர்கள் தான் செயல்படுத்துகின்றனர். வீட்டுக்கு வீடு திமுகவினர் நிற்கின்றனர். அதிகாரிகளை நியமித்து கட்டுக்கட்டாக படிவங்களை கொடுக்கின்றனர். தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். அடுக்குமாடி குடியிருப்புகளில் திமுகவினரை கையெழுத்து போட்டு படிவங்களை கொடுக்கின்றனர். இந்த முறைகேடு களைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை