மேலும் செய்திகள்
சரக்கு வாகனம் மோதி பலி
12-Sep-2025
கோவை: சிங்காநல்லூர் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பானுமதி, 52. இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் அருகே உள்ள காமராஜர் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vzwcfz3d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, அவ்வழியாக அரிசி மூட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனம், இன்ஸ்பெக்டர் பானுமதியின் பைக் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லப்பட்டார். அங்கு தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
12-Sep-2025