உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்சோ வழக்கில் ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பெண் வழக்கறிஞர் கைது

போக்சோ வழக்கில் ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பெண் வழக்கறிஞர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வழக்கு நடத்த 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்சோ நீதிமன்ற அரசு பெண் வழக்கறிஞரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பான போக்சோ வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தை சார்பாக அரசு வழக்கறிஞராக கல்பனா ஆஜராகினார். வழக்கை நடத்துவதற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் கல்பனா 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். இந்த பணத்துடன், கல்பனாவை அவரது வீட்டில் வைத்து சந்தித்த , 10 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை கொடுத்துள்ளார்.அதனை வாங்கிய கல்பனா, அருகில் இருந்த மேஜைக்கு அடியில் வைத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கல்பனாவை கையும் களவுமாக கைது செய்ததுடன் ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

இளந்திரையன் வேலந்தாவளம்
டிச 05, 2025 22:20

இந்த உலகில் இரண்டே பிரிவுகள் தான் உள்ளது... நல்லவர் தீயவர்கள்... இல்லையெனில் ஒரு பெண்குழந்தை பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் வழக்கறிஞரே எதிராக உள்ளது வெட்க கேடு


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 05, 2025 21:38

அரசு வழக்கறிஞர் என்றால் அந்த கட்சிக்காரராகத்தானே இருப்பார் அப்போ கட்சியில் இருந்து மூணு நாளைக்கு பணி இடைநீக்கம் செஞ்சிடுவாங்களே


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2025 21:28

குற்றவாளிகளுடன் அடையுங்கள் ........


சிட்டுக்குருவி
டிச 05, 2025 21:26

என்ன கொடுமைடா சாமி ?நீதி கடை நிலையில் இருப்பவருக்கெல்லாம் எப்படி சென்றடையும் .காசு சம்பாதிக்க விருப்பமுள்ள வழக்கறிஞ்சர் அரசு பதவி வேண்டாம் என்று கூறி சம்பாதனையில் ஈடுபட்டிருக்கலாம் .


GMM
டிச 05, 2025 21:23

அதிசயம் ஆனால் உண்மை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை