உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

சென்னை : 'தீபாவளி பண்டிகைக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்' என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.நாடு முழுதும் வரும் 31ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6:00 முதல் 7:00 மணி வரை; இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் தன்மை உடைய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி, பட்டாசுகளை வெடிக்க, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் வழியாக முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்கள்; குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.Bala
அக் 21, 2024 10:40

இதையெல்லாம் மதிக்காதீர்கள். ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டுமே இது போன்ற நிபந்தனைகள்.


Mani . V
அக் 21, 2024 06:09

அதையும் தண்ணீரில் நனைத்துத்தான் வெடிக்க வேண்டும் என்று சொல்லலாம் ஆபீசர். ஆமா, இந்த அரசியவியாதிகளின் ஸாரி அரசியல்வாதிகளின் வருகையின் போது டன் கணக்கில் வெடி வெடிக்கிறார்களே, இதற்க்கெல்லாம் கட்டுப்பாடு கிடையாதா நேர்மையான ஆபீசர்?


Raj
அக் 21, 2024 05:14

வருடத்திற்க்கு ஒரு முறை வரும் தீபாவளிக்கு 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கும் நேரம் ஆனால் நாளெல்லாம் புகையை கக்கி கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, இது மாசுபடுவதில்லையாம். கேவலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை