உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல் நாள் உறுப்பினர்; மறுநாள் தலைவர் அடித்தது யோகம் நவாஸ்கனி எம்.பி.,க்கு

முதல் நாள் உறுப்பினர்; மறுநாள் தலைவர் அடித்தது யோகம் நவாஸ்கனி எம்.பி.,க்கு

சென்னை:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., நவாஸ்கனி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகத்தில், நேற்று நடந்த வாரிய உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத்தில், தலைவராக நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோரை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.பின், நவாஸ்கனி அளித்த பேட்டி:சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டதாக தி.மு.க., அரசு உள்ளது. வக்பு வாரியம் இனி, பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். வரும் காலங்களில் இச்சமுதாயத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.வக்பு நிலங்களை பாதுகாப்பதற்கும், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். வக்பு வாரியத்தில் தடையில்லா சான்று வழங்கும் முறையை மாற்ற ஆலோசிக்கப்பட்டு உள்ளது. வரும் கூட்டத்தில் தடையில்லா சான்று கொடுப்பதை நிறுத்தி விட்டு, ஏற்கனவே என்ன நடைமுறையில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்தனரோ, அந்த நடைமுறையை உருவாக்குவோம். வக்புக்கு சொந்தமான நிலங்களை சரியான முறையில் அடையாளம் கண்டு அவற்றை விற்க தடை விதிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.இவர், வக்பு வாரியத்தில் உறுப்பினராக நேற்று முன்தினம் தேர்வானார். நேற்று தலைவரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ