உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அணை திறப்புக்காக 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை: அமைச்சர் துரைமுருகன்

அணை திறப்புக்காக 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை: அமைச்சர் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சாத்தனூர் அணை திறப்பின் போது 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர்' என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டி உள்ளார்.முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக , அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ராமதாஸ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி இருந்தனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து உள்ளார்.அவரது அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது. சாத்தனூர் அணை திறப்பின் போது 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 5வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு டிச.,2ல் 1.80 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புக்கின்றனர். சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது. அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் உயிர்சேதத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அணை திறப்பின் மூலம் பெரிய பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படாமல் அரசு மக்களை பாதுகாத்தது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குறித்து அடுத்தடுத்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க்கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டும் அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

R.MURALIKRISHNAN
டிச 03, 2024 19:51

திராவிட மாடலில் எச்சரிக்கை விட்டிருப்பீர்கள். அதாவது சொல்வதை செய்யோம் செய்வதை சொல்லோம்


Rpalni
டிச 03, 2024 18:34

வயசு ஆயிடிச்சு வாய் கொளறுது பதவி ஆசை பிடிச்சு ஆட்டுது வெகு சீக்கிரத்துல உத்தய்யன்னா ஒதச்சுடுவாரு


ManiK
டிச 03, 2024 17:49

இன்னாத்த அஞ்சு தபா கூவிநீங்கோ?!! உங்க தலைவர் நாங்க ரொம்ப அதிரடியா செய்ல்பட்டு சாதாரண மழை பெஞ்ச சென்னையை பாதுகாத்து தூங்கி போயிட்டோம்னா?? இல்ல சென்னை தவிர வேற ஊரு இருப்பது இப்போதான் சொன்னாங்கனா??


duruvasar
டிச 03, 2024 17:07

நாங்க 5 முறை கூவினோம் . அமைச்சரே என்ன சொல்லவாறீக ? நாடு சாமத்தில் கூவினா யாருக்கு ஐயா கூவீணீக ? கூவியதும் கடமை முடிச்சிடுச்சினு நினைத்து அவியல் செய்ய போயிட்டிகளோ ?


Srinivasan Krishnamoorthi
டிச 03, 2024 17:02

பதவில இருந்த என்ன சொன்னாலும் சரின்னு நினைப்பார்கள் என துரைமுருகன் நினைக்கிறார் டிசம்பர் 2015 ல் ஜே ஜே அரசு முன்னெச்செரிக்கையாக முன்கூட்டியே நீர் திறந்து விடாதது தான் சென்னையில் பெரும் பகுதிகள் 14 அடி உயரம் வரை முழுக்க காரணம். அதே போல சாத்தனுர் அணை ஒரு பொருட்டாகவே கருதப்பட வில்லை இப்போது திமுக அரசால். முன்னெச்சரிக்கையாக நீரை 29ம் தேதி திறந்திருந்தால் கண்டிப்பாக ஒரே நேரத்தில் 1.65 லட்சம் திறந்திருக்க வேண்டி நேர்ந்திருக்காது.


KRISHNAN R
டிச 03, 2024 17:34

நவம்பர் 29 என்றால் எல்லோரும் இனி மறக்காதீர்கள் மக்களே


ஆரூர் ரங்
டிச 03, 2024 18:58

2015 இல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் முன்பே நகரத்தில் ஏராள மழை பெய்து அடையாற்றில் வெள்ளம் இருந்தது. ஆற்றில் பாதிக்கு மேல் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் தண்ணீர் செல்ல வழியின்றி வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. ஒருசிலமணி நேரத்தில் 25 சென்டிமீட்டர் மழை பெய்தது. திறக்காமலிருந்திருந்தால் ஏரியே உடைந்திருக்கும். இப்போதும் சாத்தனூர் அணை தூர்வாரப்படாததால் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகி விட்டது. திராவிஷமே அப்படித்தான்.


தமிழ்வேள்
டிச 03, 2024 16:49

அட ஆமாம்ல ....நட்டநடுஜாமத்துல , டேம் தொறக்கறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி , அஞ்சு முறை எச்சரிச்சாரு ....நம்ம தொரை தான் புனல் வச்சுக்கினு கூவினார் போல ...


Haja Kuthubdeen
டிச 03, 2024 15:54

தனக்கு வந்தாதான் திறுகுவலி தெரியும் என்பார்கள்.அஇஅதிமுக ஆட்சியிலும் மக்களின் நலம் கருதிதானே செய்து இருப்பார்கள்...அப்ப எதிர்கட்சியாயிருந்த திமுக என்ன செய்தது!!???


ponssasi
டிச 03, 2024 14:47

அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தார்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று கதறிக்கொண்டுள்ளார்கள் அவர்களிடம் நேரில் சென்று கூறுங்கள் பார்க்கலாம், உங்கள் மீது _________


Sathya
டிச 03, 2024 13:54

This guy and his party are liers and people also accept them


SUBRAMANIAN P
டிச 03, 2024 13:42

அரசியல் பண்ணாம அவியலா பண்ணுவாங்க ன்னு உங்க தலைவர்தான் பாயிண்டு எடுத்து குடுத்துருக்காரு. அதான் இப்போ வெச்சி வெச்சி செய்யுறாங்க. நீங்க அவ்வளவு கண்டென்ட்டு குடுத்துகிட்டே இருக்கீங்க. அப்போப்போ ஒன்னு னா சரி. இடைவிடாம அவங்க சொல்றமாதிரியே நடந்துக்குறீங்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை