| ADDED : மார் 18, 2024 05:59 AM
சென்னை: தமிழகத்தில் காட்டுத்தீ சம்பவங்கள் சில நாட்களாக அதிகரித்துள்ளன. இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய அறிக்கை அடிப்படையில், அதிகபட்சமாக, திண்டுக்கல் மாவட்டங்களில், 93 இடங்களில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, சேலம் மாவட்டத்தில், 24; விழுப்புரத்தில், 9; கிருஷ்ணகிரியில், 6; கன்னியாகுமரியில், 5, பெரம்பலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா, 3; வேலுாரில், 2; நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, தருமபுரி, ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா, ஒரு இடத்தில் என மொத்தம், 152 இடங்களில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது தெரியவந்தது. இந்த இடங்களில் தீயணைப்பு பணிகளுக்கு வனத்துறை கள பணியாளர்கள் விரைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.