உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

சென்னை: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ‛‛ விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸ் மனுவில் முகாந்திரம் இல்லை'' எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vaiko
ஜன 09, 2024 22:08

உள்ளே வைத்து இவர குத்துங்கள் எஜமான். அப்பாவி பெரியார் டம் போராட்டகாரர்களை தேவையில்லாமல் அடித்து நொறுக்கினான். கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி