உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி மளிகை கடைக்காரரிடம் மோசடி

ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி மளிகை கடைக்காரரிடம் மோசடி

கோவை: கோவையை சேர்ந்த, 45 வயது நபர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன் வந்த போன் அழைப்பில் பேசிய நபர், 'நான் சைபர் கிரைம் போலீஸ். நீங்கள் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள். உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய போகிறோம்' என, கூறினார். மளிகைக் கடைக்காரர் பயந்து போனார்.அப்போது, அந்த நபர், 'வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 15,000 ரூபாய் அபராதமும், ஆவண செலவாக, 340 ரூபாயும் செலுத்த வேண்டும்' என்றார்.மளிகைக் கடைக்காரர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார். பின், தன்னிடம் பணம் பறிக்கப்பட்டதை அறிந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, அவர்கள் தெரிவித்த மொபைல் போன் எண் மற்றும் வங்கி கணக்கை விசாரித்ததில், பணம் பறித்தது கோவை வடவள்ளியை சேர்ந்த கல்லுாரி மாணவர் மதன், 20, என்பது தெரிந்தது.போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் தன் நண்பர்கள், ஒன்பது பேருடன் சேர்ந்து பலரிடம் பணம் பறித்தது தெரிந்தது. மதன் சிறையில் அடைக்கப்பட்டார். உடந்தையாக இருந்த, 18 - 21 வயதுடைய ஒன்பது பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை