உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச சேர்க்கைக்கு சிபாரிசு கூடாது: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

இலவச சேர்க்கைக்கு சிபாரிசு கூடாது: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து சுயநிதி பள்ளிகளிலும், நுழைவு நிலையான எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்கள், அரசால் நிரப்பப்படுகின்றன.இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, 8ம் வகுப்பு வரையிலான கல்விக் கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல், 22 முதல் இம்மாதம், 20ம் தேதி வரை ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், அதை குலுக்கல் முறையில் மட்டுமே, ஒதுக்கீடு செய்ய வேண்டும்; மாறாக சிபாரிசு அடிப்படையில் ஒதுக்கக் கூடாது என, பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Justin
மே 23, 2024 11:42

இந்த கல்வி உரிமை சட்டம் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவர்களுக்கு கிடைக்க பெறவில்லை மாறாக நல்ல பைனான்ஸ் ஸ்டேட்டஸ் உள்ளவர்கள் அதிகம் பயன் பெறுகிறார்கள் ஒதுக்கப்பட்டவர்கள் அப்படியே தன் உள்ளார்கள் வயதிலும் ஏஜ் இல்லை என்று கொடுக்கவில்லை இப்பொழுது வயது அதிலும் பள்ளி இல்லை என்று கொடுக்கவில்லை அப்புறம் எதற்கு இந்த சட்டம் தயவுசெய்து தகுது உ டையவருக்கு வாய்ப்பு அளியுங்கள்


Kasimani Baskaran
மே 23, 2024 08:14

கடந்த மூன்றாண்டுகளில் நிச்சயம் சிபாரிசுக்கடிதம் கொடுத்தால் முன்னுரிமை / நிச்சயம் இடம் என்று இருந்தது போல அதாவது எதிலும் ஏழைகளை முன்னேற விடக்கூடாது என்பதுதான் திராவிட மாடல்


Svs Yaadum oore
மே 23, 2024 06:29

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து சுயநிதி பள்ளிகளிலும், சதவீத இடங்கள், அரசால் நிரப்பப்படுகின்றனவாம் இதுதான் காங்கிரஸ் கொண்டு வந்த RTE அரசியல் சட்டம் ஹிந்து மக்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் அவர்கள் சொந்த காசை செலவு செய்து பள்ளி நடத்தினால் கூட சதம் இடம் இலவசமாக அரசுக்கு ஒதுக்க வேண்டும் ஆனால் அரசு உதவி பெறும் சிறுபான்மை என்று கூறும் மதம் மாற்றிகள் நடத்தும் பள்ளிகளுக்கு சதம் இலவச ஒதுக்கீடு கிடையாது அரசு உதவி பெற்று பள்ளி நடத்தி மதம் மாற்றிகள் தாராளமாக அரசு செலவில் மதம் மாற்றம் செய்யலாம் இந்த மதம் மாற்றிகள்தான் தமிழனை படிக்கச் வைத்தார்களாம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ