உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ்சில் இலவச பயணம்: போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு

பஸ்சில் இலவச பயணம்: போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், 'போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்' வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று, கடந்த 2021ல் அறிவித்தார்.இத்திட்டம் ஏட்டளவிலேயே இருந்தது. இதற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டும், போலீசாருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.மேலும், இது தொடர்பான விபரங்களை, டிச., 16க்குள் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kanns
டிச 01, 2024 08:41

STOP V.Fat Pay-Perks-Freebies of All Govt Servants. Strictly Enforce appropriate Minm Wages to All GOs from Presudent to Labourers only for Worked Hours& Days presently 65%5.2hrs/dayX 235days. Unwilling Staff can get Jobs Elsewhere


Kasimani Baskaran
நவ 30, 2024 07:24

பணி காரணமாக சென்றால் போக்குவரத்து படி உண்டு. பிறகு எதற்கு இலவச பயணம். பக்கவாட்டில் சம்பாதிக்க இதுபோலவெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது. நேர்மையாக வாழ வகை செய்ய வேண்டும்.


Mani . V
நவ 30, 2024 05:43

ஆமா, இவுங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்களா, இல்லையா? எதற்கு இலவசம்? பாடுபட்டு நாட்டுக்கு வாரிக் வரிக் கொடுக்கும் ஏழைகள், விவசாயிகள் காசு கொடுத்துத்தானே பயணம் செய்ய வேண்டியுள்ளது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை