உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குரூப் - 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் - 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை:'குரூப் - 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் உள்ள, தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக, போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தற்போது, அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலகங்களிலும், சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுனர்கள் வாயிலாக வைத்து நடத்தப்பட உள்ளது.இதில் மாணவ, மாணவியர் பங்கேற்று பயிற்சி பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ