உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ம.நீ,ம., சார்பில் இலவச ஆங்கில பயிற்சி

ம.நீ,ம., சார்பில் இலவச ஆங்கில பயிற்சி

சென்னை : மக்கள் நீதி மய்யம் அறிக்கை: பள்ளி மாணவ - மாணவியரின், திறன் மேம்பாட்டை வளர்ப்பதில், கட்சி தலைவர் கமல் மிகுந்த அக்கறை கொண்டுஇருக்கிறார். கமல் பண்பாட்டு மையம் சார்பில், பராமரிக்கப்படும் நம்மவர் படிப்பகங்களில், புத்தகங்கள், இலவச 'வைபை' வசதியுடன் கூடிய கணினிகள் உள்ளன. அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வாயிலாக செயல்படும் 'லீப்' என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளித்து வருகிறது.இந்நிறுவனத்துடன் இணைந்து, நம்மவர் படிப்பகங்களில், கோடை விடுமுறையில், ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, இலவச ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம், ஏப்., முதல் ஜூன் வரை, ஆறு வாரங்களுக்கு நடத்தப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankar
மார் 18, 2025 12:05

முதலில்- நல்லதமிழ் கற்றுக்கொடுங்கள்- மாற்றத்தை பிறகு பார்க்கலாம்


xyzabc
மார் 18, 2025 11:38

Language is not the barrier


Oru Indiyan
மார் 18, 2025 11:35

எவ்வளவு பணம் வாங்குனிங்க ..லீப் நிறுவனத்திடம் இருந்து.


Barakat Ali
மார் 18, 2025 09:58

ஹிந்தி நல்லா தெரிஞ்சவரு கம்மலு அங்கிளு.... ஹிந்தி வேணாம் இங்கிலீப்பீசு படிங்க ன்னு குறிப்பால் உணர்த்துகிறார் ....


Raman
மார் 18, 2025 08:26

Comedy continues


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை