உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?'' என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.'கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ''கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது?'' என்பது குறித்து தமிழக உள்துறை செயலர், தமிழக டிஜிபி ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், ''போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?'' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

R Kay
மே 09, 2024 00:43

கண்ணியமான நேர்மையான போலீசை எல்லாம் பழைய திரைப்படங்களில்தான் இனி பார்க்க முடியும் இளிச்சவாயர்களிடம் வீரம் காண்பிப்பதும், ரௌடிகளிடம் பம்முவதும்தான் இன்றைய நிலை


menaka menaka
மே 09, 2024 00:09

எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது கஞ்சா பயன் படுத்துபவர்களால் ஏற்படுத்தபடும் குற்றங்கள் பெரும்பாலும் காவல் நிலையத்தில் பதியப்படுத்துவதில்லை மாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமரசம் செய்து அனுப்பி வைக்க படுகின்றனர் இதனால் கஞ்சா விற்பனை செய்வதும் வெளியே தெரியாதவாறும் அதனால் ஏற்படும் குற்றஞ்களும் மறைக்கபடுகின்றன


Bala
மே 08, 2024 22:06

மு கருப்புநிதி சுடலையின் திராவிடியன்கள் தெலுங்கு திருட்டு மாதிரி மது, கஞ்சா, கொக்கேயினில் நடக்கும் பொழுது அவர்களின் உதவியில் இனத்தை அழித்து உலகப் பணக்காரன்களா இருக்கின்றான்கள்


Suppan
மே 08, 2024 21:46

அதற்கென்ன டாஸ்மாக் மாதிரி போதைப்பொருட்களை விற்பனை செய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்திவிட்டால் போகிறது அரசுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் வருமானம் அதிகரிக்கும் மக்கள் எக்கேடு கேட்டால் என்ன வழக்கம் போல் கனியக்கா விடியல் ஆட்சி வந்தால் போதைப்பொருட்கள் தடை செய்யப்படும் என்பார்.


rama adhavan
மே 08, 2024 20:13

அது என்ன வெளி மாநிலம் மட்டும்? தமிழக நபர்கள் உத்தமர்களா? இவர்களைப் பிடிப்பதே இல்லையா? வெளி மாநில ஆட்கள் எங்கிருந்து கடத்துகின்றனர்? எங்கு பிடிபடுகின்றனர்? தமிழ்நாட்டில் நெட்ஒர்க் எங்கு உள்ளது? யார் யார் அதன் தலை? வெளி மாநிலம் என்றால் எந்தெந்த மாநிலங்கள்? அம் மாநிலங்களின் காவல் துறைக்கு தகவல் தரப்பட்டதா? அவர்கள் பதில், மேல் நடவடிக்கை என்ன? வெளி மாநில ஆட்கள் என்பதே பொய்யான தகவலா? தலையை சுற்றுகிறது அல்லவா? அது தான் சூட்சுமம், புரிகிறதா?


Ramesh Sargam
மே 08, 2024 20:07

திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் ஏன் என்றால், அதை விநியோகிப்பவனுக்கே சன்மானம் கொடுத்து கவுரவிக்கிறது திருட்டு திமுக அரசு


raja
மே 08, 2024 19:58

போலீஸ் மட்டுமுண்ணு சொல்லுவதில் தமிழர்களுக்கு உடன்பாடு இல்லை கணம் நீதி மான்களே விடியல் ஆட்சியாளர்களின் உதவியும் உள்ளது என்று தமிழர்கள் எண்ணுகிறார்கள்


Raa
மே 08, 2024 19:57

இதைவிட பேரிடி அந்த துறைக்கு வேண்டாம் ஒருவகை போதையை அபிசியலாக விற்கும் அரசு எப்படி இன்னொரு போதையை தடுக்க முடியும்? போதை என்பது போதை தான் அதற்கு எப்படி அளவீடு கொடுக்க முடியும்?


Siva
மே 08, 2024 19:36

போலீஸ் கடமையை செய்ய நமது மாடல் அனுமதி இல்லை ஆகவே அதையும் கஞ்சா மேக்அரசு நிறுவனங்கள் என்று அறிவிக்க விடலாம் மன்னா அப்போது எல்லாம் வல்ல இறைவன் செயல் வாழ்க தமிழ் வளர்க தக்காளி


M S RAGHUNATHAN
மே 08, 2024 19:35

கருத்து சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறோம்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ