உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி; தந்தை கண் முன்பே பரிதாபம்

சென்னையில் வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி; தந்தை கண் முன்பே பரிதாபம்

சென்னை: சென்னையில் தந்தை கண் முன்பே மகள் வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வந்த ஒரு தம்பதியின் மகள் வாசலில் உள்ள கேட்டை திறந்து மூடியுள்ளார். அப்போது 7 வயது சிறுமி கேட்டை மூடிய போது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மகளை தந்தை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்த போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுமி மீது கேட் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தந்தை கண் முன்பே நடந்துள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் இணையத்தில் வைரலாகி கண் கலங்க வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vijaya kumar CRS
பிப் 15, 2025 19:10

Sliding gate is more dangerous... To be avoided...


Kundalakesi
பிப் 15, 2025 00:14

எவளோ வலியில் துடித்துருக்கும் அந்த பிஞ்சு. இனி பெற்றோர்கள் கவனமாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்.


nsathasivan
பிப் 14, 2025 20:11

பாவம் குழந்தையும், அதனை இழந்து தவிக்கும் அவரது பெற்றோரும்.எமன் எந்த ரூபத்தில் வருவான் என்பது யாருக்கும் தெரியாது.


visu
பிப் 14, 2025 19:20

இந்த கதவுகள் செய்ய எல்லாம் பெரிய தகுதிகள் நிர்ணயிக்க படவில்லை கூடுதல் பணத்திற்காக எடை மிகுந்த கதவுகள் உழைக்கும் என்று சொல்லி செய்து கொடுக்கிறார்கள் அதற்கு தேவையான உறுதித்தன்மை செய்வதில்லை .கதவுகள் எடை குறைவாக இருப்பது நல்லது


Nandhagopal R
பிப் 14, 2025 18:10

Rip


naranam
பிப் 14, 2025 15:26

இவ்வளவு எடை மிகுந்த கதவுகள் எதற்கு? அதையும் ஒழுங்காகக் கட்டி நிலை நிறுத்தவில்லை போலிருக்கிறதே! பாவம் அந்தக் குடும்பம். அன்பு மகளை இழந்து வாடும் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை