உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்ணாடி கூரை ரயில் சோதனை

கண்ணாடி கூரை ரயில் சோதனை

ராஜபாளையம் : செங்கோட்டை - புனலுார் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் ரயில் பாதை நுாறு ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. தற்போது இந்த பாதையில் தண்டவாளங்களை பலப்படுத்தி, கூடுதல் பெட்டிகளுடன் கூடிய ரயில்களை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 22 நவீன பெட்டிகளை கொண்ட சோதனை ரயில் ஓட்டம் மதுரையில் இருந்து கொல்லம் வரை 2 நாட்கள் நடந்தது. இதில் கண்ணாடி கூரை கொண்ட 'விஸ்டோடோம்' என சுற்றுலா பயணியருக்கான பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த சோதனை வெற்றி அடைந்த பின் 18 முதல் 22 பெட்டிகளை கொண்ட ரயில்களை மதுரை - கொல்லம் இடைய இயக்க முடியும், கூடுதல் பயணியர் செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை