உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை ஆகிறது.அமெரிக்கா - சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் அதன் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.இந்நிலையில் இன்று (ஏப்ரல் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9 ஆயிரத்தை தாண்டி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Yasararafath
ஏப் 21, 2025 19:42

தங்கம் இன்னும் பல மடங்கு உயர வேண்டும்.தங்கம் உயர்ந்தால் தான் பெண்கள் யாருக்கும் திருமணம் நடக்காது.ஆண்கள் முன் வர மாட்டார்கள்.


அப்பாவி
ஏப் 21, 2025 18:53

வளர்ச்சியோ வளர்ச்சி... எங்கேயோ போய்க்கிட்டிருக்கோம்.


Siva Subramaniam
ஏப் 21, 2025 13:00

Should reach ONE Lakh rupees per 8gms.- by December 2025


MP.K
ஏப் 21, 2025 12:44

ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கத்தை மறந்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். தங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும், மறக்க வேண்டும், கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும். மக்கள் மத்தியில் திருமணம் உள்ளிட்ட இல்ல நிகழ்ச்சி என்றாலே தங்கம் தான் முக்கிய இடம் பிடிக்கிறது.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 21, 2025 10:39

அதென்ன வரலாறு காணாதான்னு தினம் தினம் போட்டா சரியா? இன்னும் மென்மேலும் வரலாறு படைக்க வாழ்த்துக்கள். தானாக நகைகள் மீதான ஆர்வம் குறையட்டும் வரதட்சிணை கொடுமைகள் ஒழியட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை