உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சவரனுக்கு ரூ.120 குறைவு

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சற்று மாற்றம் காணப்படுகிறது.ஆபரணத் தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்பட்டு வந்த மாற்றம் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வந்தது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய காத்திருந்தவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர்.இந் நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் காணப்படுகிறது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் குறைந்துள்ளது.அதன் படி ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.7,135 ஆக இருக்கிறது. சவரன் 120 ரூபாய் குறைந்து ரூ.57,080 ஆக விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களாக(டிச.8 முதல் டிச.17) நிலவிய தங்கம் விலை விவரம் வருமாறு; டிச.8 - ரூ.56,920 டிச.9 - ரூ.57,040 டிச.10 - ரூ.57,640 டிச.11 - ரூ. 58,280 டிச. 12 - ரூ.58,280 டிச. 13 - ரூ. 57,840 டிச.14 - ரூ. 57,120 டிச.15 - ரூ. 57,120 டிச.16 - ரூ. 57,120 டிச.17 - ரூ. 57,200


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ