உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பத்திரப்பதிவு விபரம், ஆதார் எண் பட்டாவில் சேர்க்க அரசு முடிவு

 பத்திரப்பதிவு விபரம், ஆதார் எண் பட்டாவில் சேர்க்க அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகள், ஆதார் எண் ஆகிய விபரங்களை, பட்டாவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. தமிழகத்தில் வீடு, மனை வாங்கும்போது, அதற்கான பத்திரப்பதிவுடன் பட்டா மாறுதலிலும் மக்கள் தற்போது கவனம் செலுத்துகின்றனர். இதை கருத்தில் வைத்து, பட்டா மாறுதல் பணிகளை எளிமையாக்கி வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வழங்கப் படும் பட்டாவில், மாவட்டம், தாலுகா, கிராமம், நில உரிமையாளர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு, வகைப்பாடு ஆகிய அடிப்படை விபரங்கள் மட்டுமே உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த வடிவமைப்பிலேயே தற்போதும் பட்டா வழங்கப்படுகிறது. இன்றைய சூழலில், பட்டாவில் சொத்து குறித்த பல்வேறு கூடுதல் விபரங்கள் இடம்பெற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது: முந்தைய காலங்களில், பட்டா பெற்ற நபர், அந்த சொத்தை விற்பது அரிதாக நடக்கும். ஆனால், தற்போது நிலங்கள் தொடர்பான அடுத்தடுத்த பரிமாற்றங்கள் அதிகரித்து உ ள்ளன. குறிப்பாக, பட்டாவில் உள்ள விபரங்களை பத்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கும்போது, பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், பட்டாவின் வடிவமைப்பை மாற்றி, அதில் கூடுதல் விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும். இதன்படி, பட்டாவில், தொடர்புடைய பத்திரத்தின் எண், சொத்தின் நான்கு எல்லைகள் குறித்த விபரம், உரிமையாளரின் ஆதார் எண் போன்ற விபரங்களை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பட்டாவின் வடிவமைப்பை மாற்றவும், அதில் கூடுதல் விபரங்கள் சேர்க்கவும் அவசியம் உள்ளது. இதற்கான பணிகளை துவங்க, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vasanthi Sdm
டிச 13, 2025 11:03

தேங்க்ஸ் ஆல் பேப்பர்ஸ்


Vasanthi Sdm
டிச 13, 2025 11:01

பத்திரம் போதும் பட்டா எதற்கு தேவய இல்ல


Vasanthi Sdm
டிச 13, 2025 10:55

நெக்ஸ்ட் அல்ரெடி பத்திரத்திலயும் ஆதார் இணைக்க வேண்டும் 50 இயர்ஸ் முன்னாடி உள்ள பத்திரத்திற்கும் பொருந்தும்


Vasanthi Sdm
டிச 13, 2025 10:42

எஸ் ஆல் பத்திரத்துடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்


Krishna
டிச 13, 2025 09:37

ONLY ClearTITLE is VALID Legally& Administratively-LandRecords NOT PattaCITIZENSHIP.


GMM
டிச 13, 2025 07:52

முட்டையில் இருந்து கோழி. கோழியில் இருந்து முட்டை. பட்டா சிட்டா மூலம் பத்திரம். பத்திர பதிவு. பத்திர பதிவு பின் பட்டா. எது சரி. பத்திர பதிவு செய்ய பக்கா பட்டா இல்லாத நிலையில் வருவாய் துறை வரைவு பட்டா கூட்டு பட்டாவாக இருந்தாலும் கட்டண அடிப்படையில் ஒரு நாளில் வழங்க வேண்டும். எதுவும் இல்லை என்றால் அதற்குரிய சான்று எண். வரைவு பத்திரம் வருவாய் துறை வழியே சரி பார்த்து 1 மாதத்தில் பதிவு துறைக்கு வழங்க வேண்டும். குறைந்தது பத்திர எண், பட்டா எண் வரலாறு 50 ஆண்டுகள். தமிழக நில அபகரிப்பு அதிகம். முதல் உரிமையாளர் சட்ட பூர்வ வாரிசு மறு விற்பனையில் முதல் உரிமை தர வேண்டும். ஆதார், வருமான வரி கணக்கு வாரிசு சான்று கட்டாயம். மறு விற்பனை இடைவெளி 30 ஆண்டுகள். 12 லட்சம் மேல் பரிவர்த்தனை என்றால் வருமான வரி தடையின்மை சான்று.


Kasimani Baskaran
டிச 13, 2025 07:19

ஆதாரை வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் தவிர யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆகவே கூடுதலான பாதுகாப்பு என்பதில் சந்தேகம் இல்லை.


rama adhavan
டிச 13, 2025 05:30

பட்டாவே தேவையற்ற ஆணி. இதை ஒழிக்க வேண்டும். இந்த காகிதம் வருவாய் துறையினருக்கு பணம் கொட்டும் கல்பக மரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை