உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்கள் தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவது உறுதி; ராமதாஸ் காட்டம்

அரசு ஊழியர்கள் தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவது உறுதி; ராமதாஸ் காட்டம்

சென்னை: 'அரசு ஊழியர்கள் வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டப்படுவது உறுதி' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண் பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும். உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்ற முடியாதவை அல்ல; அவை புதிதாக முளைத்த கோரிக்கைகளும் அல்ல. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர்கள் போராடி வருகின்றனர். தி.மு.க., அரசின் தொடர் துரோகங்களையும், ஏமாற்று வேலைகளையும் கண்டித்து தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

அரசின் கடமை

அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதும், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதும் தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். அதை விடுத்து அரசு ஊழியர்களை மிரட்டி பணிய வைக்கலாம் என்று தமிழக அரசு நினைத்தால் அரசுக்கு தோல்வி தான் பரிசாகக் கிடைக்கும். தமிழக மக்களின் தவிர்க்க முடியாத அங்கம் அரசு ஊழியர்கள் ஆவர். மக்களை எவ்வாறு தி.மு.க., அரசு ஏமாற்றுகிறதோ, அதேபோல் தான் அரசு ஊழியர்களையும் ஏமாற்ற முயல்கிறது. இனியும் தாமதிக்காமல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 2021ம் ஆண்டில் தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தியதில் அரசு ஊழியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

சூளுரை

தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை நினைத்து கொதித்துப் போயிருக்கும் அரசு ஊழியர்கள், வரும் தேர்தலில் தி.மு.க.,வை எதிர்க்கட்சியாக்கப் போவதாக சூளுரை மேற்கொண்டுள்ளனர். அதே மனநிலையில் தான் மக்களும் இருக்கிறார்கள் என்பதால் வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டப்படுவது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

மார் 19, 2025 15:59

செந்தமிழ் சீமான் தான் அரசங்க ஊழியர்களை காப்பற்ற வேண்டும்.


A.Gomathinayagam
மார் 19, 2025 14:09

நிச்சயம் அகற்ற மாட்டார்கள். முறை கேடாக வருமானம் ஈட்டுவதை கண்டு கொள்ளாது


MUTHU
மார் 19, 2025 17:41

மறைமுகமாய் மக்களிடம் கொள்ளையடித்து கொள்ளுங்கள் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று கூறிவிடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை