உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவில் சர்வீசஸ் தேர்வில் அரசு செயலர் மகள் சாதனை

சிவில் சர்வீசஸ் தேர்வில் அரசு செயலர் மகள் சாதனை

சென்னை, : சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில், தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அதுல் ஆனந்தின் மகள் இஷானி ஆனந்த், தேசிய அளவில், 106வது, 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்று உள்ளார். இவர், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்வாவது மூன்றாவது முறை. கடந்த ஆண்டு நடந்த தேர்வில் தேர்வான இஷானி, ஐ.பி.எஸ்., பணியிடம் தேர்வு செய்து, தற்போது, தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அதற்கு முன் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றார்; அப்போது, ஐ.ஆர்.எஸ்., பணியை தேர்வு செய்தார். ஆனால், பணியில் சேராமல் மீண்டும் தேர்வு எழுதி, ஐ.பி.எஸ்., தேர்வு செய்தார். தற்போது, மூன்றாவது முறையாக தேர்ச்சி பெற்றுள்ளதால், ஐ.ஏ.எஸ்., பணியிடத்தை தேர்வு செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை